தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிரம்பியது வைகை அணை.. 69 அடியை எட்டியதால்.. உபரி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு 3ம் கட்ட வார்னிங்

Google Oneindia Tamil News

தேனி : வைகை அணை முழு கொள்ளளவான 69 அடியை க டந்ததால், உபரி நீரை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார். 69 அடியை கடந்ததையடுத்து சுமார் ஒரு மணியளவில் நீர் திறக்கப்பட்டு, மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வைகை கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்டது.

Recommended Video

    நிரம்பியது வைகை அணை.. 69 அடியை எட்டியதால்.. உபரி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு 3ம் கட்ட வார்னிங்

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இவ்வணைக்கு இந்த ஆண்டின் துவக்கம் முதலே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

    தென்மேற்கு பருவ மழை காரணமாக வருஷநாடு, வெள்ளிமலை, சதுரகிரி மேகமலை ஆகிய மலைகளின் மூலமாக வைகை ஆற்றிலும், முல்லைப் பெரியாறு, சுருளியாறு கொட்டக்குடி ஆறு மூலமாக நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்ததால் அணை வேகமாக நிரம்பியது.

    டிக்டாக் மோகம்.. 160 அடி உயரத்தில் இருந்து விழுந்து டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு.. பகீர் வீடியோடிக்டாக் மோகம்.. 160 அடி உயரத்தில் இருந்து விழுந்து டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு.. பகீர் வீடியோ

    அணை நிரம்பியது

    அணை நிரம்பியது

    குறிப்பாக கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1731 கன அடியாக வந்து கொண்டு உள்ளது. நீர் இருப்பு 5ஆயிரத்து 542மில்லியன் கனஅடியும் உள்ளது

    நீர் திறப்பு

    நீர் திறப்பு

    இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று மதியம் சுமார் 1மணியளவில் நீர்மட்டம் 69 அடியை கடந்ததை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மணியை ஒலிக்கவிட்டு, மேல் மதகு வழியாக உபரி நீரை திறந்து வைத்தார்.

    கலெக்டர் முரளிதரன்

    கலெக்டர் முரளிதரன்


    அப்போது கலெக்டர் முரளிதரன் கூறும் போது, தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை 69 அடியை எட்டியுள்ளது.
    ஏற்கனவே வைகை கரையோர மக்களுக்கு முறைப்படி இரண்டு கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அணை நீர்மட்டம் 69 அடியை கடந்ததையடுத்து சுமார் ஒரு மணியளவில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வைகை கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்டது. ஏற்கனவே வைகை கரையோர மக்களுக்கு முறைப்படி இரண்டு கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மக்களுக்கு வார்னிங்

    மக்களுக்கு வார்னிங்

    ஏற்கனவே குடிநீருக்கு 69 கன அடியும், பாசனத்திற்காக 900 கன அடி நீர் வினாடிக்கு திறக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 730 கனஅடி தண்ணீர் ஆகமொத்தம் வினாடிக்கு1699 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வைகை கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், குழந்தைகள் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சுகுமாறன் உதவி செயற்பொறியாளர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வைகைஅணை கட்டப்பட்டு 63ஆண்டுகளில் 30வது முறையாக அணைநீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது.

    English summary
    Theni District Collector Muralitharan opened the surplus water as the Vaigai Dam exceeded its full capacity of 69 feet. The water receded at about one o'clock after crossing 69 feet and a third stage flood warning was issued for the people of Vaigai coast.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X