திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீன்ஸ் 1 கிலோ ரூ.290, கேரட் 1 கிலோ ரூ.190.. லாக்டவுனால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

Google Oneindia Tamil News

நெல்லை: நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தத. மூன்று மடங்கு விலை அதிகம் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர். உதாரணத்திற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பீன்ஸ் விலை 1 கிலோ - 290 ரூபாய்க்கும், கேரட் 1 கிலோ- 190 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 1 கிலோ என்கிற அளவிற்கு 100 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றும் இன்றும் மற்றும் அனைத்து கடைகளும் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது .

 ஸ்டெர்லைடிற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்.. 93 பேருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்- முதல்வர் ஸ்டெர்லைடிற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்.. 93 பேருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்- முதல்வர்

மக்கள் பலர் காய்கறிகளை மொத்தமாக வாங்க ஆர்வம் காட்டியதால் காய்கறிகள் விலை ஒரே நாளில் அதன் விலை மூன்று மடங்கு வரை உயர்ந்தது. காய்கறிகளை பொறுத்தவரை தேவை அதிகரித்தால், அதன் விலை அதிகரிக்கும். இதனை பயன்படுத்தி காய்கறி வியாபாரிகள் நேற்று வரை மிக குறைவாக விற்ற காய்கறிகளின் விலை மூன்று மடங்கு அதிகம் விலை வைத்து விற்பனை செய்தனர்.

விலை உச்சம்

விலை உச்சம்

மக்களோ நாளை முதல் நமக்கு எந்த பொருளும் கிடைக்காதோ என்ற அச்சத்தில் கிடைத்த காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கு குவித்தனர். நேற்று மாலை தொடங்கி இன்று மாலைக்குள் எல்லா காய்கறிகளின் விலை மிகப்பெரிய உச்சத்தை சந்தித்துள்ளன. பல இடங்களில் காய்கறிகள் ஸ்டாக் இல்லை என்கிற அளவிற்கு விற்றுவிட்டன. நெல்லை காய்கறி மார்க்கெட் நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

பீன்ஸ் 200 ரூபாய்

பீன்ஸ் 200 ரூபாய்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் நேற்று கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது அதேபோல் கேரட் கிலோ 200 ரூபாய்க்கும், அவரை பீன்ஸ் போன்ற காய்கறிகள் 200 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றன. இதேபோல் நேற்று வரை கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த பல்லாரி இன்று கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பொதுமக்கள் வேதனை

பொதுமக்கள் வேதனை

இதேபோல் முட்டைக்கோஸ் கத்திரிக்காய் போன்ற காய்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் வேறு வழி இல்லாமல் பெரும் குழப்பத்துடன் வாங்கி செல்கின்றனர். நேற்று வரை 1கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அவரைக்காய் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடும் விலை உயர்வினால் பொது மக்கள் மிகுந்த வேதனையுடன் காய்கறிகளை வாங்கி சென்றனர்

விலை மிக மிக அதிகம்

விலை மிக மிக அதிகம்

சென்னை நிலவரம் இன்னமும் மோசமாக உள்ளது. சென்னையில் பீன்ஸ் விலை 1 கிலோ - 290 ரூபாய்க்கும், கேரட் 1 கிலோ- 190 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 1 கிலோ என்கிற அளவிற்கு 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி தொடங்கி, பச்சை மிளகாய், வெங்காயம் எதை வாங்க நினைத்தாலும் அதன் விலை உச்சத்தில் தான் இருந்தது. விலை அதிகம் வைத்து விற்றால் நடவடிக்கை என அரசு எச்சரித்திருந்தது. ஆனால் யாரும் அதை மதிக்கவில்லை என்பதே உண்மை.

English summary
Vegetable prices have risen sharply across Tamil Nadu due to a week-long uninterrupted curfew from tomorrow. Merchants sold at three times the price. For example, in various parts of Tamil Nadu, beans were sold at Rs. 290 per kg, carrots at Rs. 190 per kg and brinjal at Rs. 100 per kg.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X