Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

16 ஆண்டுகளுக்கு பின் திருநெல்வேலி மாநகராட்சியை கைப்பற்றிய திமுக! அதிமுக வசமானது திசையன்விளை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியை 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றிய நிலையில் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஆளுங்கட்சியினர் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பிற நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பின்னர் பிப்ரவரி 19ல் நடந்தது. பொதுமக்கள் ஆர்வமாக ஓட்டளித்தனர். மொத்தம் 61 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ஆளுங்கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு திருநெல்வேலி மாவட்டமும் விதிவிலக்கல்ல.

 16 ஆண்டுகளுக்கு பிறகு

16 ஆண்டுகளுக்கு பிறகு

குறிப்பாக திருநெல்வேலி மாநகராட்சியை 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியுள்ளது. அதாவது திருநெல்வேலி மாநகராட்சியில் 2 முறை திமுகவும் 3 முறை அதிமுகவும் மேயர் பதவியை கைப்பற்றி இருந்தது. தற்போது ஆறாவது முறையாக நடைபெற்ற தேர்தல் முடிவில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 55 வார்டுகளில் இதுவரை 48 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிவடைந்துள்ளது. இதில் திமுக கூட்டணி 43 இடங்களிலும், அதிமுக வெறும் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவி திமுக வசம் செல்கிறது.

நகராட்சிகள் யாருக்கு

நகராட்சிகள் யாருக்கு

அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய மூன்று நகராட்சிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை முடிவும் நேற்றும் வெளியானது. இதில் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் ஆகிய இரண்டு நகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது புதிதாக உருவாக்கப்பட்ட களக்காடு நகராட்சியில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளனர். இதனால் நகராட்சி தலைவர் பதவியை பிடிப்பது யார் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு இரண்டாவது இடத்தில் திமுக பத்து வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதால் சுயேச்சைகள் ஆதரவுடன் திமுகவே களக்காடு நகராட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

பேரூராட்சிகளிலும் ஆதிக்கம்

பேரூராட்சிகளிலும் ஆதிக்கம்

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளின் தேர்தல் முடிவுகள் வெளியானதில் திமுகவே அதிக வார்டுகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. அதாவது 12 பேரூராட்சிகளில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளது. அதிமுக, ராதாபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, திசையன்விளை பேரூராட்சியை மட்டும் கைப்பற்றியுள்ளது. திசையன்விளையில் பாஜக மற்றும் அதிமுகவிற்கு ஆதரவு அதிகம் என்பது இந்த வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது. மீதமுள்ள நான்கு பேரூராட்சிகளில் திமுக குறைவான இடங்களை பெற்றுள்ளது. ஆயினும் இந்த பேரூராட்சிகளில் சுயேட்சைகள் ஆதரவுடன் திமுக நிர்வாகத்தை கைப்பற்றலாம் என தெரிகிறது.

வெற்றி கொண்டாட்டம்

வெற்றி கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தமட்டில் தற்போதைய நிலவரப்படி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முழுமையாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தற்போது மாநகராட்சிக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளதால் அக்கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளர். வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள், தொண்டர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக மிகுதியில் உள்ளனர். வெற்றி வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

டெபாசிட் இழப்பு

டெபாசிட் இழப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் திமுக எழுச்சி கண்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க அதிமுக கூட்டணியின்றி தனித்து நின்ற பாஜக பெரும்பாலான வார்டுகளில் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+