Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா.. இதுதான் தமிழ்நாடு! வெளிப்பட்ட இந்து-முஸ்லிம் ஒற்றுமை.. இந்தியாவுக்கே பாடமெடுத்த நெல்லை ஏர்வாடி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: ஏர்வாடியில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற கோயில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தது மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது.

நாடு முழுவதும் மதவாத மோதல்கள், வன்முறைகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், மாட்டுக்காக மனிதர்கள் அடித்துக் கொல்லப்படுவது, கும்பல் தாக்குதல்கள் போன்றவை பெருகிக்கொண்டு இருக்கின்றன.

அண்டை மாநிலமான கர்நாடகம் வரை இத்தகைய வகுப்புவாத வன்முறைகள் அதிகரித்துவிட்ட நிலையிலும், தமிழ்நாடு தனித்து நின்று மதநல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

மதநல்லிணக்க பூமி

மதநல்லிணக்க பூமி

அதற்கு பல உதாரணங்களை இங்கு எடுத்துக் காட்டலாம். ஆங்காங்கே சில ஏற்க முடியாத நிகழ்வுகள் அரங்கேறினாலும் எங்கள் ஒற்றுமையை தகர்க்க முடியாது என்று தமிழர்கள் அவ்வப்போது நிரூபித்துக் காட்டிவிடுகிறார்கள். குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மத நல்லிணக்கம் என்பது மற்ற பகுதிகளைவிட அதிகம் எனலாம்.

நெல்லை ஏர்வாடி

நெல்லை ஏர்வாடி

இஸ்லாமியர்களை உறவுமுறை வைத்து அழைக்கும் பழக்கம் இப்பகுதிகளில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அவரவர் அவரவருக்கு விருப்பமான மதங்களை பின்பற்றினாலும், அதை கொண்டு தங்களுக்குள் பகைமை பாராட்டிக்கொள்ளாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறார்கள். அதை பறைசாற்றும் வகையிலான சம்பவம் நெல்லை ஏர்வாடி பகுதியில் நடந்து இருக்கிறது.

தேர் வெள்ளோட்டம்

தேர் வெள்ளோட்டம்

ஏர்வாடியில், திருவழுதீஸ்வரர் ஆலய அழகுத்தேர் வெள்ளோட்டம் சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. மங்கள இசை முழங்க, இந்து சமய மூத்தவர்கள் கொடி அசைக்க, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரிப்போடு தேரின் வடமிழுக்க, இளைஞர்கள் அர்ப்பணிப்போடு தடி போட்டு நகர்த்த 40 ஆண்டுகளாக நின்ற தேர் மெல்ல மெல்ல நடனமாடி நகர்ந்தது.

ஒற்றுமை

ஒற்றுமை

எவ்வித மத வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து சமய மக்களும் ஒன்றுக்கூடி தேர் இழுக்க இத்தனை வருடங்களுக்கு பின் தன் நிலையிலிருந்து முதல் அடியை எடுத்து வைத்த தேரின் தோரணையை பார்த்து கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியோடும் வியப்போடு பார்த்தனர்.
காலம் காலமாக தென் மாவட்டங்களில் கோயில் தேர் திருவிழாவின்போது தேரின் வடத்தை பிடித்து இழுப்பது முதலில் இஸ்லாமியர்கள் என்று கூறப்பட்டு வந்தது.

தேரிழுத்த இஸ்லாமியர்கள்

தேரிழுத்த இஸ்லாமியர்கள்

அதை மெய்பிக்கும் வகையில் சகோதரத்துவத்துடன் 40 ஆண்டுகளாக நகராமல் இருந்த தேரின் வடத்தை இந்துக்களுடன் சேர்ந்து அப்பகுதி இஸ்லாமியர்களும் இழுத்தது தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்துக்கு சான்றாக அமைந்து இருக்கிறது. மத சடங்குகள், ஊர்வலங்கள், பண்டிகைகள், யாத்திரைகளை வைத்து கலவரங்களை தூண்ட ஒரு தரப்பு சதி செய்யும் சூழலில் அதே மத சடங்கான தேர் திருவிழாவின் மூலம் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+