நெற்கட்டும்செவலில் கலக்கிய ஓ.பன்னீர்செல்வம்! கிரேன் மூலம் ராட்சத மாலை! வரவேற்க நின்ற பெருங்கூட்டம்!
நெல்லை: நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு அங்கு கிடைத்த உற்சாக வரவேற்பு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
இப்படியொரு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை அவருடன் சென்ற வைத்திலிங்கமே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
பூலித்தேவரின் 307-வது பிறந்தநாளையொட்டி நெற்கட்டும் செவலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவில் எழுந்துள்ள அதிகார மோதலுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு நகர்வும் கட்சி தொண்டர்களாலும் அரசியல் நோக்கர்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் முகாமிட்டு ஆதரவாளர்கள் சந்திப்பு ஆலோசனை என பிஸியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவர் சிலைக்கு அவரது மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக இன்று சென்றிருந்தார்.

ராட்சத மாலை
அங்கு முக்குலத்தோர் சமுதாய அமைப்பினரும், அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரே எதிர்பார்க்காத வகையில் வரவேற்பு கொடுத்து அசத்தியிருந்தனர். ராட்சத மாலையை கிரேன் மூலம் அணிவித்து 3 கிலோ மீட்டருக்கு மேல் திரண்டு நின்று அவரை வரவேற்று கூட்ட நெரிசலில் நீந்த வைத்திருக்கிறார்கள் ஆதரவாளர்கள். தனக்காக திரண்ட பழையக் கூட்டத்தை கண்ட பன்னீர்செல்வத்தின் முகமெல்லாம் ஒரே பூரிப்பு.

பிரச்சார வேன்
பிரச்சார வேனில் நின்றபடி இரு மருங்கிலும் நின்ற ஆதரவாளர்கள், பொதுமக்கள், முக்குலத்தோர் சமுதாய அமைப்பினர் என பலதரப்பட்டோரையும் பார்த்து வணக்கம் வைத்தபடியே பூலித்தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். இப்படியொரு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை அவருடன் சென்ற வைத்திலிங்கமே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கூட்டம் திரண்டது எப்படி?
இதனிடையே அங்கு திரண்ட கூட்டம் குறித்த தகவல் எடப்பாடி பழனிசாமி டீமுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எங்கிருந்து இவ்வளவு கூட்டம் திரண்டது என்ற ஆராய்ச்சியை தொடங்கியுள்ளதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு. எது எப்படியோ அதிமுகவில் ஏற்பட்ட களேபரங்களுக்கு பின்னர் முதல்முறையாக பொது நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு கண்ணியமான முறையில் கூட்டம் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications