ஊரக உள்ளாட்சித் தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு - ஜனநாயகக் கடமையாற்றிய 100 வயது பாட்டி
ஊராக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பகல் 1 மணி வரை 33.78% வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. 100 வயது பாட்டி நேரில் வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 4 வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - வெள்ளை நிறம், கிராம ஊராட்சி மன்ற தலைவர் - இளஞ்சிவப்பு நிறம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) - பச்சை நிறம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் (மாவட்ட கவுன்சிலர்) - மஞ்சள் நிறம் ஆகிய வண்ண வாக்குசீட்டுகள் மூலம் வாக்கு செலுத்தப்படுகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் மழைபெய்து வரும்போதிலும் மக்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். நன்மங்கலம் ஊராட்சியில் உள்ள அரசினர் பள்ளியில் இயங்கும் வாக்குச் சாவடியில் நடைபெறும் வாக்குப் பதிவில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டும், கூட்டம் கூட்டமாக நின்று வாக்களித்து வருகின்றனர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் கொரோனா ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவை இணையதளம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் 4 மணி நேரத்தில் 20 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தென்காசி மாவட்டத்தில் 24 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 61,000 பேர் வாக்களித்துள்ளனர். காலை 11 மணி நிலவரப்படி 14.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், பாப்பாக்குடி, சேரன்மகாதேவி, அம்பை உள்ளிட்ட 5 யூனியன்களுக்கும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த முதற்கட்ட தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு ஏற்கனவே 211 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.இதனால் 5 ஒன்றியங்களிலும் 902 பதவி இடங்களுக்கு 3,006 பேர் போட்டியிடுகின்றனர்.
மாவட்டத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவிற்காக 621 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 182 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் 64 வாக்குச்சாவடிகளில் நேரடியாக வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவை தொடர்ந்து இன்று காலை 6 மணி முதலே வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க தொடங்கினர். பெரும்பாலான வாக்குப்பதிவு மையங்களில் காலையிலேயே மக்கள் கூட்டம் இருந்தது. நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் காலையிலேயே திரண்டு வந்து வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் காணப்பட்டது.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆதார் கார்டு உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வந்தாலும், வாக்காளர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு நடைமுறை என்பதால் ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு நிறத்திலான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு உள்ளன.
தென்காசி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக கடையம், ஆலங்குளம், கீழப்பாவூர், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் தேர்தல் இன்று நடந்தது. இதில் 1266 பதவியிடங்களுக்கு 3,534 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மாவட்டத்தில் மொத்தம் 1328 வாக்குச்சாவடிகளில் 357 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. இன்று காலை 6 மணிக்கே வாக்காளர்கள் ஓட்டு போட மையங்களுக்கு திரண்டனர். பெரும்பாலான மையங்களில் காலை முதலே வாக்காளர்களின் கூட்டம் களை கட்டியது. ஆர்வமுடன் வந்து அவர்கள் ஓட்டுப்போட்டு சென்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications