காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி? - விவசாயிகள் பீதி.. “விளக்கம் கொடுங்க முதல்வரே”!
திருவாரூர் : திருவாருர் அருகே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அப்பகுதி விவவசாயிகளும், சுற்றுச்சூழலியலாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்ரோ கார்பன்
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காவிரி டெல்டா பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, 2020ம்ஆண்டு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

பரவும் தகவல்
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. மூடப்பட்டுள்ள கிணறுகளை திறப்பதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் மறைமுக முயற்சிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்ததாக வெளியான தகவல் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன் கேள்வி
இந்நிலையில், திருவாருர் அருகே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காவிரி டெல்டாவின் திருவாரூர் சேந்தமங்கலம் பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக அரசு அனுமதி அளித்திருப்பதாக வரும் செய்திகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

எடப்பாடி போல
அப்பகுதியில் விவசாயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது. அப்படி அனுமதிக்கப்பட்டால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதற்கு எந்தவித அர்த்தமும் இல்லாமல் போய்விடும். இதிலும் எடப்பாடி பழனிசாமி அரசைப் போலவே ஸ்டாலின் அரசும் தமிழகத்தை வஞ்சிக்க நினைக்கக் கூடாது" என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications