அரக்கர்கள்.. டாட்டூ.. குவைத்தில் தமிழர் கொலை.. முகத்தை பார்த்து அதிர்ந்த மனைவி! காரணமே அந்த பெண்தான்
திருவாரூர்: குவைத்தில் கொலை செய்யப்பட்ட தமிழரின் உடல் நேற்று அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வீட்டிற்கு வந்த கணவரின் உடலை பார்த்த மனைவி, முகத்தில் மோசமான காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை என்று கூறி இவர் குவைத்துக்கு கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில் கடந்த 8ம் தேதி இவர் அங்கு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஒட்டகம் மேய்த்து வந்த அவரை, அவரின் முதலாளி சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

ஒட்டகம்
குவைத்தில் மெடிக்கல் கடை ஒன்றில் வேலை பார்க்க வேண்டும். அந்த கடைக்கு அவ்வப்போது ஓட்டுனராகவும் இருக்க வேண்டும் என்றுதான் இவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் குவைத்தில் இவரை ஒட்டகம் மேய்க்க விட்டுள்ளனர். அதோடு மோசமாக கொடுமைப்படுத்தி, இவர் ஒட்டகம் மேய்க்கவில்லை என்றதும் சுட்டுக்கொன்றுள்ளனர் . முத்துக்குமரன் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளியான 24 வயது நபர்தான் இப்படி துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

கைது
இவர் தற்போது கைது செய்யப்பட்டுவிட்டார். இவரை வெளிநாடு அனுப்பிய ஏஜெண்ட் ஒரு பெண் என்று தெரிய வந்துள்ளது. . அவர் இப்படி பலரை வெளிநாட்டிற்கு அனுப்பி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் முத்துக்குமரன் உடல் நேற்று அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வீட்டிற்கு வந்த கணவருடன் உடலை பார்த்த மனைவி, முகத்தில் மோசமான காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

என்ன சொன்னார்?
இது தொடர்பாக அவரின் மனைவி ஊடகங்களில் அளித்த பேட்டியில், என் கணவன் போன 5 நாட்களில் கிளம்பி விடுவேன் என்று கூறினார். எனக்கு பிடிக்கவே இல்லை. என்னை 3 பேர் கொடுமைபடுத்துகிறார்கள். சாப்பாடு கூட கொடுக்கவில்லை. கொடுத்த சாப்பாட்டையும் பிடுங்கி கொள்கிறார்கள் என்று என்னிடம் சொன்னார். ஏஜென்ட் பெண்ணிடம் போன் செய்து சொல்லியதற்கும்.. நீ வர வேண்டாம். அங்கேயே இரு என்று சொல்லி இருக்கிறார். இல்லை இங்கே நிலைமை மோசமாக இருக்கிறது என்று சொல்லியும் அந்த பெண் கேட்கவில்லை.

நடந்தது என்ன?
அதற்கு அப்பறம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இப்போது என் கணவரின் முகத்தை பார்த்தேன். முகத்தில் மோசமாக காயங்கள் இருக்கின்றன. முகத்திலேயே அடிச்சு கொன்று இருக்கிறார்கள். ஒரு மிருகத்தை அடிப்பது போல அடித்து கொன்று இருக்கிறார்கள். அவரின் முகத்தை பார்த்தும் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் முகத்தையே சிதைத்துவிட்டனர்.

மனைவி பேட்டி
அவர் முகத்தை அடையாளமே பார்க்க முடியாத அளவிற்கு சிதைத்து உள்ளனர். என் கணவர் என் பெயரை இதயத்தில் பச்சை குத்தி இருப்பார். அதை வைத்துதான் நானே கண்டுபிடித்தேன். அந்த அளவிற்கு அவரின் முகத்தை மோசமாக சேதம் செய்துள்ளனர். அரக்கர்கள் போல என் கணவனை தாக்கி உள்ளனர். அவர் எந்த தப்பும் செய்யவில்லை. வேலை கேட்டு போனதற்கு இப்படி தாக்கி உள்ளனர். என்னங்க கொடுமை இது என்று அந்த முத்துகுமரனின் மனைவி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications