திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்எல்ஏவைவிட அதிக சம்பளம் வாங்குறேன்.. நான் ஏன் குப்பம் தொகுதியில் போட்டியிடுறேன்? விஷால் பேச்சு

Google Oneindia Tamil News

திருப்பதி: ஒரு எம்எல்ஏ எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அந்த அளவுக்கு நான் என் படங்கள் மூலம் சம்பாதிக்கிறேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் திருப்பதியில் இரு கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவர் மாணவர்கள கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். விஷால் கூறுகையில் என்னை பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன.

நான் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் போட்டியிட போகிறேன் என்ற தகவல் உலா வருகிறது. அந்த செய்தி உண்மையானதல்ல. ஒரு எம்எல்ஏ என்ன சம்பாதிக்கிறாரோ அதைவிட நான் அதிகமாகவே என் படங்களில் சம்பாதிக்கிறேன்.

மண் சார்ந்த பணிகளுக்கு ஜிஎஸ்டியை உயர்த்த பரிந்துரை! புது சோதனையால் விழிபிதுங்கும் ஒப்பந்ததாரர்கள்! மண் சார்ந்த பணிகளுக்கு ஜிஎஸ்டியை உயர்த்த பரிந்துரை! புது சோதனையால் விழிபிதுங்கும் ஒப்பந்ததாரர்கள்!

எம்எல்ஏ

எம்எல்ஏ

ஒரு எம்எல்ஏவுக்கு இருக்கும் பெயர், புகழைவிட எனக்கு அதிகமாகவே இருக்கிறது. இப்போதைக்கு அரசியலுக்கு வரும் ஆர்வம் எனக்கு இல்லை. ஒரு வேளை வந்தாலும் ஆந்திராவில் வரமாட்டேன். ஜெகன்மோகன் ரெட்டி 3,500 கிலோமீட்டர் பாதயாத்திரை செய்த போதே அவர்தான் வெற்றி பெற்று முதல்வராக போகிறார் என தேர்தலுக்கு ஓராண்டு முன்பே நான் தெரிவித்திருந்தேன்.

சந்திப்பு

சந்திப்பு

இப்போது அவரை நேரில் சந்தித்தேன். இந்த சந்திப்பை வைத்துதான் நான் குப்பம் தொகுதியில் போட்டியிட போவதாக வதந்திகளை சிலர் கிளப்புகிறார்கள். ஜெகன் மோகன் ரெட்டியை எனக்கு மிகவும் பிடிக்கும். சாதாரண சமூகசேவை செய்யும் எல்லோருமே அரசியலில் இருப்பவர்கள்தான். தேர்தலில் போட்டியிட்டு கட்சியில் இருப்பவர்கள் மட்டுமே அரசியல்வாதிகள் என்று அர்த்தம் கிடையாது என விஷால் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து காலியாக இருந்த அவருடைய ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட விஷால் முற்பட்டார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது வேட்புமனுவில் ஏதோ தவறு இருந்ததாக கூறி நிராகரிக்கப்பட்டது. நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக விஷால் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

நடிகர் சங்க கட்டடம்

நடிகர் சங்க கட்டடம்

நடிகர் சங்கம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகுதான் திருமணம் என்ற முடிவில் விஷால் உள்ளார். இவர் தனது நெருங்கிய தோழியை காதலித்து வந்ததாகவும் அவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது. அண்மையில் உதயநிதி அமைச்சரானதற்கு பாராட்டுகளையும் வாழத்துகளையும் தெரிவித்து கொண்ட விஷால், செய்தியாளர்களை சந்தித்த போது, அமைச்சரான உதயநிதி சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த விஷால், மேடைகளில் சினிமா பாடல்களை பாடுவதை ஜெயக்குமார் நிறுத்த வேண்டும் என அதிரடியாக கருத்துகளை தெரிவித்திருந்தார்.

English summary
Actor Vishal says that He is getting more salary than that of an MLA getting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X