திருப்பதிக்கு உலக அங்கீகாரம்.. 7 மலைகளுக்கு வந்த பெருமை! மகிழ்ச்சியில் துள்ளும் ஏழுமலையான் பக்தர்கள்
திருப்பதி: திருப்பதி மலைகள் சப்தகிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.. விஷ்ணு பகவானின் ஓய்விடமாகவும் இது கருதப்படுகிறது.. இவை ஆதிசேஷனின் ஏழு தலைகளின் சின்னமாகவும், புனிதமாகவும் போற்றப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், திருமலை திருப்பதி மலைக்கு யுனெஸ்கோவின் உலக அங்கீகாரம் கிடைத்திருப்பது, பெருமாள் பக்தர்களிடையே பெரும் வரவேற்பையும், உற்சாகத்தையும் தந்து வருகிறது.
திருமலை திருப்பதி என்றாலே நினைவுக்கு வருவது ஏழு மலைகள்தான்... நாட்டின் பணக்கார கோயில்களில் முதலிடத்தில் இருப்பது திருப்பதிதான்..
ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கக் கூட தயங்குவதில்லை. அப்படி பெருமாளை தரிசிக்க வேண்டும் என்றால் ஏழு மலைகளை கடந்துதான் செல்ல வேண்டும். இப்படி மலைகளை மையமாக்கி பெருமாள் இருப்பதால் இவருக்கு மலையப்பர், ஏழுமலையான், மலை குனிய நின்றான் போன்ற சிறப்பு பெயர்களும் உண்டு.
இந்த திருப்பதி ஏழு மலைகளுக்கும் சிறப்பம்சங்கள் உள்ளன.. ஒவ்வொரு மலைக்கும் ஒரு குறிப்பிட்ட பெயர் ஏன் வந்தது என்ற வரலாறும் உள்ளது..

7 மலைகளின் பெருமைகள்அந்தவகையில், திருப்பதியில் ஏழுமலையான் வசித்த 7 மலைகளான சப்தகிரிகள் விஷ்ணு பகவான் ஓய்வெடுத்த ஆதிசேஷனின் 7 பாதங்கள், அந்த 7 மலைகள், சேஷாத்ரி, நிலாத்ரி, கருடாத்ரி அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி மற்றும் வெங்கடாத்ரி ஆகியவை புனிதமாக கருதப்படுகிறது.
விருஷன் என்ற அரசன் மோட்சத்தை அடைய இம்மலைக்கு வந்து தவம் செய்தாராம். இதனால் அந்த மன்னனின் பெயரில் இந்த மலை விருஷாத்ரி என்று பெயர் பெற்றது. விருஷபன் என்ற அசுரன் பெருமாளுடன் சண்டையிட்டு, இறுதியில் தன்னுடைய தவறை உணர்ந்து இதற்கு பரிகாரமாக பக்தர்களின் பாதம் படும் இடத்துக்குத் தன் பெயரை வைக்கும்படி வேண்டினானாம்.. அதன்படி, அவனது பெயரில் இது 'விருஷபாத்ரி மலை' என்று பெயர் பெற்றது.
கருடாழ்வார் தன் பாவத்தை போக்க இங்கு தவம் செய்ததால், இழத 'கருடாத்ரி மலை' எனப் பெயர் பெற்றது. இதை கருட மலை என்றும் அழைக்கிறார்கள்.. இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது 'கருட மலை' எனப் பெயர் பெற்றது.
ஏழு மலை வரலாறு
குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதி வராகரை வேண்டி அஞ்சனாதேவி தவம் செய்த மலை. அந்தக் குழந்தைதான் ஆஞ்சநேயர். இவளது பெயரில் ஏற்பட்ட மலை 'அஞ்சனாத்ரி மலை' எனப்படுகிறது. பூலோகத்தில் பெருமாள் தங்குவதற்காக நாராயண மகரிஷியால் அடையாளம் காட்டப்பட்ட மலை என்பதால் அது நாராயணாத்ரி மலை என அழைக்கப்படுகிறது.
வேம் + கடம் = வேங்கடம். வேம் - பாவம், கடம் - எரிபடுதல். அதாவது இந்த மலையில் நம்முடைய பாதங்கள் பட்டதும் பாவங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்பது பொருள். பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு 'வேங்கடாத்ரி மலை' என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு கோலத்தில் காட்சி தருகிறார்.
உலக பெருமை பெற்ற திருப்பதி
அதுமட்டுமல்ல, இங்குள்ள ஒவ்வொரு அடியிலும் புனிதம் தெளிவாகத் தெரியும். திருப்பதி மலையின் ஒவ்வொரு மலைக்கும் ஆன்மீகத்தையும் இயற்கை அழகையும் இணைக்கும் திருப்பதி மலைகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு புகலிடமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதல், பல ஏராளமான அரியவகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தாயகமாக இம்மலை உள்ளது.. அத்துடன், காலநிலை பன்முகத்தன்மை கொண்டது...
திருப்பதிக்கு உலக அங்கீகாரம்
இப்படி சிறப்பும் பெருமையும் புகழும் வாய்ந்த திருப்பதி 7 மலைகளுக்கு உலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. உலக பாரம்பரிய அங்கீகாரத்திற்காக யுனெஸ்கோவால் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தகவல் ஏழுமலையான் பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை தந்து வருகிறது..
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications