Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மலை போல் உயர்ந்த சிலிண்டர் விலை... மாலை போட்டு போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended Video

    மலை போல் உயர்ந்த சிலிண்டர் விலை... மாலை போட்டு போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

    நாடு முழுவதும் கடந்த 2 நாட்களுக்கு முன் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50-ம் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ.200-ம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

    எதிர்க்கட்சிகள் கண்டனம்

    எதிர்க்கட்சிகள் கண்டனம்

    தொடர்ந்து சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 4 மாதங்கள் கேஸ் விலையை உயர்த்தாமல் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். பல்வேறு இடங்களில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    சிலிண்டர்களுக்கு மாலைபோட்டு ஆர்ப்பாட்டம்

    சிலிண்டர்களுக்கு மாலைபோட்டு ஆர்ப்பாட்டம்

    இந்த நிலையில் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து திருப்பூரில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அதன்பேரில் இன்று திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து அதை பாடையில் ஏற்றுவது போல நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

    மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

    மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

     தொடர்ந்து உயர்த்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை

    தொடர்ந்து உயர்த்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. இதனை மாதத்துக்கு ஒன்று அல்லது இருமுறை ரூ.25 அல்லது ரூ.50 என்ற கணக்கில் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த அக்டோபர் மாதம் ரூ.915.50 ஆக அதிகரித்தது.

    15 மாதங்களில் ரூ.257 விலையேற்றம்

    15 மாதங்களில் ரூ.257 விலையேற்றம்

    தற்போது 4 மாதத்துக்கு பின் மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருப்பதன் மூலம், அது ரூ.965.50 ஐ தொட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் கடந்த 15 மாதங்களில் மட்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.257 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதன் விலை ரூ.1000-ஐ தொட்டுவிடுமோ என்ற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+