என்ன 400 ரூபா சம்பளமா? என் கூட வாங்க 2 ஆயிரம் சம்பாதிக்கலாம்! கடைக்காரரை தெறிக்க விட்ட பிச்சைக்காரர்
திருப்பூர் : திருப்பூரில் கடையில் பிச்சை எடுத்த இளைஞரை கடை உரிமையாளர் அழைத்த நிலையில், "400 ரூபாய்க்கு வேலை செய்யனுமா..? ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பாதிக்கிறேன்" என பதிலளித்த வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
ஜவுளி மற்றும் பனியன் போன்ற ஆயத்த ஆடைகள் தொழிலில் தொழிலில் பிரசித்தி பெற்ற திருப்பூர் மாவட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வந்து செல்லும் வியாபாரிகளை பிச்சைக்காரர்கள் அதிக அளவில் தொல்லை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

பிச்சைக்காரர்கள் தொல்லை
அதுமட்டுமல்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள் குறித்த புகார்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு குவிந்த வண்ணம் உள்ளன. இலையில் பிச்சை எடுத்த இளைஞரை வேலைக்கு அழைத்த கடைக்காரரை பிச்சை எடுக்க கூப்பிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்கள் தினமும் பிச்சை எடுப்பது வழக்கம்.

கடையில் பிச்சை
இந்நிலையில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுத்த நபர் ஒருவர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பிச்சை கேட்டுள்ளார். அப்போது, அந்தக் கடையின் உரிமையாளர், கை கால்கள் நன்றாக தானே இருக்கிறது என் கடைக்கு வேலைக்கு வா சம்பளம் தருகிறேன் என கூறி உள்ளார்.

400 ரூபாய் சம்பளமா?
சம்பளம் எவ்வளவு தருவாய் என அந்த பிச்சை எடுக்கும் நபர் கேட்டபொழுது 400 ரூபாய் ஒரு நாளைக்கு தருகிறேன் என கூறி உள்ளார். அதற்கு அந்த பிச்சை எடுத்த நபரோ 400 ரூபாய்க்கு நான் வேலை செய்ய வேண்டுமா? நான் ஒரு நாளைக்கு 2000 சம்பாதிக்கிறேன் என ஏளனமாக பதில் அளிக்கிறார். அதற்கு உரிமையாளர் இப்படி ஓசியா கொடுத்தால் கொடுத்தால் நீ சம்பாதிக்க தான் செய்வாய் என கூறுகிறார்.

தினமும் 2000 ரூபாய்
பிச்சை கொடுப்பதாக இருந்தால் இருக்கு என சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என சொல்லுங்கள். நீ வா என்னோடு உனக்கு 2000 தருகிறேன் எனக் கூறியபடி அந்த பிச்சை எடுக்கும் நபர் அங்கிருந்து செல்கிறார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications