திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம.. வாழ்ந்தால் இப்படித்தான் வாழணும்.. அபூர்வ பிறவி.. திரும்பி பார்க்க வைத்த ருக்மணியம்மாள்!

Google Oneindia Tamil News

திருச்சி: 100 வயசை கடந்த ஒரு பாட்டி நல்ல கண்பாா்வை, கேட்புத்திறன் உள்ளிட்ட முழு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்.. அவர் பெயர்தான் ருக்மணியம்மாள்.. சுமாா் 27 பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா் மூதாட்டி ஒருவா். இவருக்குதான் தமிழக மக்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள வடவோ் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராமச்சந்திரன்-ருக்மணியம்மாள் தம்பதி... கல்யாணம் ஆனதும், பிழைப்புத் தேடி திருச்சிக்கு வந்துவிட்டனர்... ராமச்சந்திரன் 1905-ம் ஆண்டும், ருக்மணியம்மாள் 1920-ம் ஆண்டிலும் பிறந்தவா்கள்.. வருஷம் தெரிகிறதே பிறந்த மாசம், தேதி சரியாக தெரியவில்லையாம்.. நினைவும் இல்லையாம்.

100 year old grandma blesses her family members online

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை அஞ்சலகம் அருகேயுள்ள ஒரு சிறு அக்ரஹார குடியிருப்பில் தங்களது வாழ்க்கையைத் தொடங்கினா். தற்போது அந்த குடியிருப்பு வளாகம் விற்கப்பட்டு, தனியாா் மருத்துவமனை, ஜவுளிக் கடைகள் அமைந்துள்ளன. இவர்களுக்கு 6 ஆண், 3 பெண் குழந்தைகள்.. இவர்களை கூலி வேலை பாா்த்தே படிக்க வைத்து ஆளாக்கினர்.. இவர்களின் வாரிசுகள் எல்லாருமே பல்வேறு மத்திய, மாநில துறைகளில் பணிபுரிந்த நிலையிலும், சிலா் ஓய்வுபெற்றும் உள்ளனா்.

பாட்டியின் கணவரும், ஒரு மகளும் இறந்துவிட்டனர்.. மற்ற 8 வாரிசுகள் உள்ளனர்.. மேலும் அந்த வாரிசுகளுக்கு 9 பேரன்கள், 7 பேத்திகள்.. அவங்களுக்கும் கல்யாணமாகி 6 கொள்ளுப் பேரன்கள், 5 கொள்ளுப் பேத்திகள் என மூன்றாவது தலைமுறையினருடன் நல்ல ஆரோக்கியத்துடனும் இந்த பாட்டி இருக்கிறார்.. தற்போது புத்தூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே ஆபிஸர்ஸ் காலனியில் உள்ள அபார்ட்மென்ட்டில் இவரது குடும்பத்தினா் வசித்து வருகின்றனர்.

வயோதிகம், முதுமை பிரச்னைகள் தவிர மற்ற நோய்கள் ஏதுமின்றி, நல்ல கண்பாா்வை கேட்புத்திறனுடன் இருக்கிறார்.. ஏதாவது படிக்க வேண்டும் என்றால் கண்ணாடி போடுகிறார்.. கடந்த வருடம் இவர் வழுக்கி விழுந்துட்டாராம்.. அதனால், இடுப்பில் மட்டும் கொஞ்சம் பாதிப்பு இருக்கிறது.. அதனால், இரும்புக் கம்பி துணையுடன் நடக்கிறாார்.. பாட்டிக்கு நல்ல குரல் இருக்கிறது.. அதனால் தினமும், இஷ்ட தெய்வங்களைப் போற்றி சுலோகங்கள், பாசுரங்கள் பாடிக் கொண்டே இருப்பாராம்.

"கொரோனாவா" அல்லது "திமுக"வா.. எதை கண்டு அஞ்சுகிறது அதிமுக அரசு.. கிராம சபை கூட்டங்கள் ரத்து ஏன்?

காலை மாலைகளில் தீபமேற்றி, பூஜை செய்து நைவேத்யம் செய்தவற்றை பிள்ளைகளுக்கு வழங்கி தானும் சாப்பிடுகிறார்.. கலப்படமில்லா கடந்த கால உணவுகளைதான் இப்போதும் சாப்பிடுகிறாராம்.. முதியோா் தினமான கடந்த வியாழக்கிழமை அவரிடம் நிறைய பேர் சென்று ஆசி பெற்று வந்தார்களாம்.. பாட்டியை நேரில் பார்க்க முடியாத எத்தனையோ வெளிநாட்டு வாசிகள், வீடியோ மூலம் பாட்டியிடம் ஆன்லைனிலேயே ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்கள்... பாட்டி இன்னும் பல ஆண்டுகள் வாழ நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.

English summary
100 year old grandma blesses her family members online
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X