திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு 75 வயசாகுது.. இப்ப போயி இப்படி செஞ்சா எப்படி.. திருச்சியில் அலறிய அய்யாக்கண்ணு!

போலீசார் மீது அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

திருச்சி: பிரதமரும் நம் முதல்வரும் என்ன சொல்லி இருக்காங்க.. கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்பதால் வயசானவங்க யாரும் வெளியே வரக்கூடாதுன்னு அறிவுறுத்தி இருக்காங்க.. இப்போ எனக்கு 75 வயசாகுது.. நிலப்பிரச்சனை விஷயமா புகார் தர போனால்,போலீஸ் ஸ்டேஷனில் என்னை அலைக்கழிக்கறாங்க.. எனக்கு மட்டும் உடம்பு சரியில்லாமல் போனால் இந்த திருச்சி மாநகர போலீஸ்தான் அதுக்கு காரணம்" என்று அய்யாக்கண்ணு பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

திருச்சியில் கொரோனா முன்னெச்சரிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.. கடந்த வாரம்கூட, கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனை வந்த ஜெர்மானியர் ஒருவர் உட்பட 3 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர். இப்போதும் கண்காணிப்பில்தான் உள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியின் பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டது. நோயாளிகளுடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. எனினும் மாவட்ட மக்கள் ஒருவித அச்ச உணர்வில்தான் உள்ளனர்.

ஒருமுறை வந்துவிட்டால் அவ்வளவுதான்.. கட்டுப்படுத்த முடியாது.. கொரோனா கம்யூனிட்டி பரவல் ஏன் ஆபத்தானது?ஒருமுறை வந்துவிட்டால் அவ்வளவுதான்.. கட்டுப்படுத்த முடியாது.. கொரோனா கம்யூனிட்டி பரவல் ஏன் ஆபத்தானது?

அய்யாக்கண்ணு

அய்யாக்கண்ணு

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் சொன்னதாவது: "உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதியவர்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என பிரதமரும், முதலமைச்சரும் அறிவுறுத்தியுள்ளனர்.

அலைக்கழிப்பு

அலைக்கழிப்பு

ஆனால் புனித ஜோசப் கல்லூரி நிலப் பிரச்சினை தொடர்பாக புகாரளிக்க கோட்டை போலீஸ் ஸ்ஷேனுக்கு சென்றேன்.. ஆனால் இந்த 3 நாட்களாக தன்னை போலீசார் அலைக்கழித்து வருகின்றனர். அந்த இடத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடு போயுள்ளது. அதை பறிமுதல் செய்ய வேண்டிய போலீசார், புகார் கொடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உரையாடல்கள்

உரையாடல்கள்

சென்னையிலிருந்து என் மீது வழக்குப் பதிவு செய்ய அழுத்தம் வந்து கொண்டிருப்பதாக பொய் செய்திகளையும் பரப்புகின்றனர். யாரிடமிருந்து அழுத்தம் வருகிறது என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள வேண்டும். இந்த 10 போலீசாரின் செல்போன் உரையாடல்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.. அப்படி ஆய்வு செய்தால் இதில் உண்மைத்தன்மை விளங்கும்.. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளேன்.

கரோனா பாதிப்பு

கரோனா பாதிப்பு

இப்போ எனக்கு 75 வயசாகுது.. இப்படி போலீசார் அலைக்கழிக்கப்பட்டதால், எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்று பயமா இருக்கு... எனக்கு மட்டும் உடம்பு சரியில்லாமல் போனால் இந்த மாநகர போலீஸ்தான் பொறுப்பு...எனக்கு ஒருவேளை கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு கேஸ் போடுவேன் மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன்" என்றார்.

English summary
coronavirus: Ayyakkannu complaint on trichy city police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X