மக்களே ரொம்ப கவனம்! சாப்பிடும் போது பேசினால் இப்படி ஒரு ஆபத்தா? திகைத்துப் போன மருத்துவர்கள்!
திருச்சி : திருச்சி அருகே சப்போட்டா பழம் சாப்பிட்ட போது பேசிக் கொண்டே இருந்த பெண்ணின் நுரையீரலின் அடிப்பகுதியில் விதை சிக்கிய நிலையில் மருத்துவர்கள் அதனை சிரமப்பட்டு அகற்றியுள்ளனர். உணவு அருந்தும் போது பேசுவதோ சிரிப்பதோ உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் மார்ட்டின் மேரி.
இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சப்போட்டா விதையை பேசிக்கொண்டு சாப்பிட்டபோது எதிர்பாராத விதமாக விழுங்கியதால் மூச்சு அடைப்பு ஏற்பட்டது.

சப்போட்டா விதை
இதன் காரணமாக அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சப்போட்டா விதை அவருடைய மூச்சு குழாய் வழியாக நுரையீரலின் அடிபாகத்திற்கு சென்று தங்கிவிட்டதை கண்டறிந்தனர். இதனால் அவருக்கு தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

சிக்கலான சிகிச்சை
இதனையடுத்து கடந்த 15 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள காது மூக்கு தொண்டை மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் குழு இணைந்து பிரான்சஸ் ஸ்கோபி என்ற சிகிச்சை மூலம் தொண்டையில் நுண்துளையிட்டு அதன் வழியாக நுரையீரலில் அடியில் சிக்கி இருந்த சப்போட்டா விதையை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பத்திரமாக அகற்றியுள்ளனர்.

மிகவும் கடினம்
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரசு மருத்துவமனை முதல்வர் நேரு," சமீபத்தில் இதேபோன்று பிரச்சனைகளோடு வந்த மூன்று நபர்களுக்கு இந்த சிகிச்சை முறையை பயன்படுத்தி அகற்றி உள்ளோம். இந்நிலையில் இந்த சிகிச்சை மிகவும் கடினமான முறையில் ஒரு பெரிய மருத்துவக் குழு இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

அறிவுறரை
இந்த சிகிச்சையை பொறுத்தவரை தனியார் மருத்துவமனைகளில் செய்திருந்தால் குறைந்தபட்சம் 5 லட்சத்திலிருந்து 7லட்சம் வரை செலவாகி இருக்கும். நாம் இலவசமாக திருச்சி அரசு மருத்துவமனையில் செய்துள்ளோம். எனவே உணவு அருந்தும் போது பேசுவது சிரிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனால் தான் அந்த காலத்திலேயே சாப்பிடும் போது பேசக்கூடாது என பெரியவர்கள் சொல்லியிருப்பார்கள் போல..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications