சென்னையில் தினமும் குடியேறி வரும் வடமாநிலத்தவர்கள்! இது நமக்கு ஆபத்து! கே.என்.நேரு எச்சரிக்கை!
வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அதிகளவு குடியேறி வருவதாக அமைச்சர் நேரு பேச்சு.
திருச்சி: சென்னையில் தினம் தோறும் குடியேறி வரும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்களால் நமக்கு தான் ஆபத்து என அமைச்சர் நேரு எச்சரித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
அண்மைக் காலமாக தமிழகத்திற்கு படையெடுக்கும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

வட மாநிலத்தவர்கள்
தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்கள் - தொழிலகங்கள் - ரயில் நிலையங்கள் - வங்கிகள் என அனைத்திலும் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் விவசாயம், சித்தாள் போன்ற அடிமட்ட பணிகளிலும் வடமாநிலத்தவர்கள் நிறைந்துள்ளனர்.குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை பார்ப்பதால் தமிழ்நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனங்களின் அதிபர்கள், உணவகம் நடத்துபவர்கள் என பலதரப்பட்டோரும் வட மாநிலத்தவர்களை பணியமர்த்திக் கொள்கின்றனர்.

விவரம் சேகரிப்பு
இதனிடையே வட மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதிச் சீட்டு வேண்டும் என வேல்முருகன் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கூட இது தொடர்பாக முழு விவரத்துடன் பேசினார். அதற்கு பதிலளித்த பேசிய முதல்வர் கூட, தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு காவல் நிலையமும் சேகரித்து வருவதாக தெரிவித்தார்.

அமைச்சர் நேரு
இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, பீகார், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், போன்ற மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வேலை வாய்ப்பு தேடி தமிழ்நாடு வருவதாகவும் சென்னையில் மட்டுமே தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் குடியேறி வருவதாகவும் தெரிவித்தார். இந்தப் போக்கு நமக்கு மிகப் பெரிய ஆபத்து என எச்சரித்த அவர், தமிழ்நாட்டில் குடியேறும் வட மாநிலத்தவர்கள் நிச்சயம் நம்மை (திமுகவை)ஆதரிக்க மாட்டார்கள் என்றும் ஆனால் அதையும் முறியடிக்க வேண்டிய பணி இருப்பதாக கூறினார்.

தேசியளவில் கவனம்
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தீர்மான கொண்டு வந்ததன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தேசியளவில் கவனம் ஈர்த்திருக்கிறார் என்றும் அதேபோல் தமிழ்நாடு பெயர் விவகாரத்திலும் உறுதியோடு செயல்பட்டு முதல்வர் வெற்றி பெற்றிருப்பதாக அமைச்சர் நேரு பேசியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications