வலிமை அஜித் போல்.. ஒரே ஆண்டில் 1.8 டன் கஞ்சா பறிமுதல் - திருச்சி போலீஸ் அதிரடி
திருச்சி: மத்திய மண்டலத்தில் கஞ்சா, குட்கா தொடா்பாக சுமாா் 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூ.2 கோடி மதிப்பிலான 1,800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூா் எஸ்.ஆா்.எம். கல்விக்குழும வளாகத்தில், போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "போதை பழக்கத்தால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. போதை பழக்கத்துக்கு அடிமையானால் குற்ற உணா்வு என்பதே இருக்காது. இதுவே குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம். போதைப் பழக்கங்களால் மகிழ்ச்சியையும் சுய மரியாதையையும் இழக்க நேரிடும்." என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுபடி போதைப்பொருள் தடுப்பு குறித்து தனிப்படை அமைத்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதைப்பொருள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வகையில் விரைவில் செல்போன் செயலி தொடங்கப்படும்.
திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரு ஆண்டில் கஞ்சா, குட்கா தொடா்பாக சுமாா் 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான 1,800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது." என்றார்.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications