• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் 19 மாவட்டங்களில் குடிப்பதற்கே தண்ணீர் மிஞ்சாது.. வைகோ எச்சரிக்கை

|

திருச்சி: தமிழகத்தில் நீர்நிலைகளை உரிய நேரத்தில் தூர்வாராமல் விட்டது தான், மிக தீவிர தண்ணீர் பிரச்சனை ஏற்பட காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என புகார் கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகயை துரிதமாக எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

water problem is the state government that has not properly maintained the watershed.. vaiko

அதிகாரத்தில் உள்ளவர்கள் மழை வரும் தண்ணீர் பிரச்சனை தீரும் என அவர்களாகவே கற்பனை செய்து கொண்டிருக்காமல், களத்தில் இறங்கி மக்கள் துயர் துடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தண்ணீர் பிரச்சனை இன்னும் 15 நாட்களில் மிக மோசமான நிலையை எட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது என கவலை தெரிவித்தார்.

நீர் நிலைகளை தூர்வார வேண்டிய நேரத்தில் தூர்வாரவில்லை. கால்வாய்களை சரி செய்யவில்லை. தமிழக அரசு உரிய நேரத்தில் நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தியிருந்தால், அதிகமான தண்ணீர் தேங்கியிருந்திருக்கும்.

ஓரளவு குடிநீர் பிரச்சனையை சமாளிப்பதற்கு நமக்கொரு வாய்ப்பு கிடைத்திருக்கும். வேலை செய்ய வேண்டிய நேரத்தில் மக்கள் பணி செய்யாமல், விட்டதன் விளைவை தற்போது மக்கள் தானே அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என வைகோ ஆதங்கம் தெரிவித்தார்.

"ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையா".. தாயின் மனதை குளிர வைத்த மகன்.. கேரளாவை உலுக்கிய கோகுல்!

தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் தவிக்கிற நிலைமை பார்த்தால் கடும் வேதனை ஏற்படுவதாக குறிப்பிட்டார். குடிநீருக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடைகால குடிநீர் விநியோகத்துக்காக தமிழக அரசு ரூ.400 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், மாற்று வழிகளைப் பயன்படுத்தி தண்ணீர் பற்றாக்குறையை போக்க விரைந்து செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

தற்போதே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றால், ஒருவேளை கர்நாடக அரசு திட்டமிட்டபடி மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் தமிழகத்திலே தலைநகர் சென்னை உட்பட 19 மாவட்டங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத ஒரு பேரபாயம் ஏற்பட்டுவிடும் என கடுமையாக எச்சரித்தார்.

எனவே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Vaiko has accused the cause of the most serious water problem because of the lack of proper water storage in Tamil Nadu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more