விளாத்திக்குளம் மாணவி கொலை! துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம்! 6 தனிப்படை அமைப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்குச் சென்ற பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொன்ற வழக்கில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த விவசாயியின் மகள், அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 10 ஆம் தேதி இரவு தேர்வுக்காக நீண்டநேரம் படித்துவிட்டு பின்னர் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றார்.

வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது அங்குள்ள போலீஸார், விளாத்திக்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு தெரிவித்தனராம்.
இதையடுத்து நேற்றைய தினம் விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நேற்று மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் தேடினர்.
அப்போது முகம், உடலில் காயங்களுடன் மாணவி, துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மாணவி சடலமாக மீட்கப்பட்டது, அவரது ஆடைகள் களைந்திருந்ததை கண்ட பொதுமக்கள் குளத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருவதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கனிமொழி தனது கண்டன பதிவில் கூறியிருப்பதாவது: "விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்" என தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட பதிவில், மாணவி காணாமல் போனதும் குடும்பத்தினர் புகார் அளித்தும் குளத்தூர் மற்றும் விளாத்திக்குளம் மகளிர் காவல்துறை அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகார் அளித்தபோதே காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தேடியிருந்தால், அந்த மாணவிக்கு நேர்ந்த இக்கொடூரம் தடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications