கள்ளக்காதல் ஜோடியின் பெரிய மனசை பார்த்தீங்களா.. தற்கொலை கடிதத்தில் தாராளம்.. கடுப்பில் குடும்பங்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரத்தில் வீட்டில் இருந்து மாயமான கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் மயிலேறி (40). இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர்.
அதே கிராமத்தை சேர்ந்த செல்வமணி மகள் மகராசி(33). இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள என்பவதால் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்தது.

கள்ளக்காதல்
இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் பிறருக்கும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மே 29ல் மகராசி தனது வீட்டில் இருந்து மாயமானார். அதேபோ்ல மயிலேறியும் காணாமல் போய் இருந்தார். இதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என்ற சந்கேம் எழுந்தது.

மாயமானவர்கள் பிணமாக மீட்பு
இதுதொடர்பாக மயிலேறியின் மனைவி ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று வெள்ளாரம் ஊருக்கு கிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் 2 பேரின் உடல்கள் கிடப்பதாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அது மயிலேறி மற்றும் மகராசி ஆகிய இருவரின் உடல்கள் என்பது உறுதியானது.

விஷம் குடித்து தற்கொலை
இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில், ‛‛எங்களது சாவுக்கு நாங்களே காரணம். இதுதொடர்பாக யாரிடமும் விசாரணை செய்ய வேண்டாம்'' என குறிப்பிட்டுள்ளனர்.அதாவது யாருக்கும் தொந்தரவு வந்துவிடக் கூடாது என்று தாராள மனசு காட்டியுள்ளார்களாம்.

போலீஸ் விசாரணை
இதையடுத்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஓட்டபிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications