தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"லீக்" ஆன ஆடியோ.. மீனா டீச்சரும், கலைச்செல்வி டீச்சரும்.. சவுக்கை எடுத்த திமுக அமைச்சர்.. விசிக சபாஷ்

அன்பில்மகேஷூக்கு விசிக வன்னியரசு பாராட்டு தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: 2 டீச்சர்கள் பேசிய சர்ச்சை ஆடியோ தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.. இதை விசிக உள்ளிட்ட கட்சிகள் பாராட்டி உள்ளன. அத்துடன் முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது... இந்த பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் சங்க தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த சமயத்தில், அரசு பொதுத்தேர்வு ஆரம்பமாகும் என்பதால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 7-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு, மறுபடியும் அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நான் சொல்றதை செய்வியா? **** சாதிதான் இருக்கு! மாணவனிடம் நஞ்சை விதைத்த ஆசிரியை.. லீக்கான ஷாக் ஆடியோ!நான் சொல்றதை செய்வியா? **** சாதிதான் இருக்கு! மாணவனிடம் நஞ்சை விதைத்த ஆசிரியை.. லீக்கான ஷாக் ஆடியோ!

போட்டி

போட்டி

இந்த பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தலில், மீனா என்ற ஆசிரியை போட்டியிடுகிறார்.. இவர் அந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.. இதனைடயே, தன்னுடைய மாணவர் ஒருவருக்கு கலைச்செல்வி என்ற இன்னொரு டீச்சர் போனை போட்டு பேசியதும், அது தொடர்பான ஆடியோவும் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது..

 கலைச்செல்வி டீச்சர்

கலைச்செல்வி டீச்சர்

டீச்சர் மீனா "கலைச்செல்வி மிஸ் உன்கிட்ட பேசுவாங்க... அவங்க சொல்றதைக் கேட்டுக்கோ... முடிஞ்சா செய். இல்லேண்ணா அதை மறந்துடணும்" என்று சொல்கிறார்.. பிறகு, உதவித் தலைமை ஆசிரியை கலைச்செல்வியிடம் போனைக் கொடுக்கிறார் மீனா.. "உன் பேர் என்ன" என்று கேட்டபடியே பேச்சைத் தொடங்குகிறார் கலைச்செல்வி. அந்த மாணவனிடம் சாதி குறித்து கேட்பது மட்டுமின்றி பள்ளியில் சில ஆசிரியர்களின் பெயரை சொல்லி இவர்களை பிடிக்குமா என்று கேட்க, அந்த மாணவரும் ஆசிரியர்களை பிடிக்கும் என்று சொல்ல தொடர்ந்து உரையாடல் நடைபெறுகிறது.

 ஹெல்ப் பண்றியா

ஹெல்ப் பண்றியா

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா? உனக்கு நம்ம ****** சாரையும், நம்ம ஸ்கூல் பி.இ.டி மாஸ்டரையும் உனக்குப் பிடிக்குமா? நீ நான் சொல்லுறதை செய்வியான்னு தெரியல... நீ எல்லாரையும் பிடிக்கும்னு சொல்லுறியே . அப்போ எப்படி உங்கிட்டச் சொல்ல? எல்லா டீச்சரையும் உனக்குப் பிடிச்சுதுன்னா, எல்லாருக்கும் பிடிச்ச பிள்ளையாவே இரு... நான் உங்கிட்ட பேசுனேன்னு யார்கிட்டயும் சொல்லாத.. நான் ஒன்னு சொன்னேன்னா அதைச் செய்யணும்" என்றார்.

 புளியங்குளம்

புளியங்குளம்

அதாவது, மாணவரின் ஊரான புளியங்குளத்தினை சேர்ந்தவர்களை சில ஆசிரியர்கள் பள்ளியில் சேர்க்க கூடாது என்று சொல்வதாகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த ஆசிரியர்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் அவர்கள் கையில் சென்று விடும் என்ற தொனியில் மாணவரிடம் அந்த ஆசிரியை பேசுகிறார்.. மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் மாணவரின் ஊரைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என்றும், சில ஆசிரியர்கள் சரியாக இருப்பதில்லை என்றும் மாணவனிடம் சொல்கிறார்.. சமத்துவம் போதிக்க வேண்டிய ஆசிரியையே, மாணவரிடம் சாதி ரீதியாக பேசியது பெரும் கொந்தளிப்பையும், எரிச்சலையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

 மீனா டீச்சர்

மீனா டீச்சர்

கலைச்செல்வியின் இந்த சாதி ரீதியான பேச்சுக்கு மீனா டீச்சரும் உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்தது.. இந்த வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணையை துவங்கினார்.. தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, கணினி ஆசிரியை மீனா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை விசிக வரவேற்றுள்ளது..

 அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

டீச்சர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பிர் மகேஷூக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு பதிவிட்டுள்ள ட்வீட்டில், "உடனடி நடவடிக்கை எடுத்த மாண்புமிகு அன்பில்மகேஷ் அவர்களுக்கு நன்றி. அதே நேரத்தில்,தென்மாவட்ட பள்ளிகளில் வெளிப்படையாக இம்மாதிரியான சாதிய உரையாடல்களை ஆசிரியர்களே ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இதை தடுக்க எல்லா மாவட்டத்திலும் ஊடகவியலாளர்கள் அடங்கிய கண்காணிப்புக்குழு ஒன்றை அமைக்கவேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.. இதுகுறித்தும் திமுக அரசு விரைவில் பரிசீலனை செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Meena teacher and kalaiselvi teachers caste audio issue and vck vanniarasu tweeted about it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X