தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் பிணத்தின் மீது ஏறிப் போய் ஸ்டெர்லைட்டை திறந்துக்கங்க.. நாம் தமிழர் வேட்பாளர் ஆவேசம்

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வேட்பாளர் ராஜசேகர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: "என் பிணத்தின் மீதுதான் ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்று ஆவேசமாக சொல்கிறார் தூத்துக்குடி நாம் தமிழர் வேட்பாளர் ராஜசேகர்!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் என்றாலே வலிமை மிக்கவர்களாகவே இருக்கிறார்கள். அப்படித்தான் சீமான் தேர்ந்தெடுக்கிறார் போல தெரிகிறது!

வடசென்னையில் காளியம்மாளும், திண்டுக்கல்லில் மன்சூரலிகானும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார்கள். ரொம்ப சீக்கிரத்திலேயே மக்களின் கவனத்தை இவர்கள் இருவருமே திசை திருப்பி விட்டார்கள். எளிய காளியம்மாளின் எழுச்சி பேச்சு ஒரு பக்கம், வெகுஜன மக்களோடு மக்களாக கலந்து உறவுகளை வலுப்படுத்தி வரும் மன்சூரலிகான் ஒரு பக்கம் என வாக்கு வங்கியை பலப்படுத்தி வருகிறார்கள்.

மோசம்.. உங்களால் குப்பைதான் சேர்ந்தது.. மிஷன் சக்தியை கடுமையாக விமர்சிக்கும் நாசா.. இதுதான் காரணம்! மோசம்.. உங்களால் குப்பைதான் சேர்ந்தது.. மிஷன் சக்தியை கடுமையாக விமர்சிக்கும் நாசா.. இதுதான் காரணம்!

மக்கள் பிரச்சனைகள்

மக்கள் பிரச்சனைகள்

இதுபோலவே தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலக்கி வருகிறார் ராஜசேகர். இவர் ஒரு தொழிலதிபர் என்றாலும் மக்களின் பிரச்சனைகளை என்றைக்கோ கையில் எடுத்தவர். ரொம்பவும் எளிமையான தோற்றம் என்றாலும் ஆழமான கருத்துக்களை அசால்ட்டாக சொல்கிறார்.

கீதாஜீவன்

கீதாஜீவன்

ஒரு பேட்டியில் ராஜசேகர் கூறும்போது, "அன்னைக்கு துப்பாக்கி சூடு நடத்தினப்போ கீதா ஜீவன் மட்டும் முன்னாடி வந்து நின்றிருக்க வேண்டியதுதானே.. ஒரு பய சுட்டிருப்பானா? சுட்டிருக்க மாட்டான், ஆனா இவங்களும் வந்து முன்னாடி நிக்க மாட்டாங்க" என்று பொளந்து கட்டுகிறார். தூத்துக்குடியில் இதே ஸ்டெர்லைட்டை முன்னிறுத்திதான் கனிமொழி வாக்கு சேகரித்து வருகிறார். இப்போது பிரபலமான கனிமொழி, மற்றும் தமிழிசையை இவர் எந்த அளவுக்கு எதிர்கொள்வார் என தெரியவில்லை.

எழுச்சி

எழுச்சி

இதை பற்றி கேட்டால், "இவர்கள் எல்லாம் மீடியாக்கள் மூலம் பிரபலமானவர்கள், நாங்கள் சொந்த முயற்சியால் மக்கள் மூலம் பிரபலமானவர்கள், இப்போதுகூட மீடியாக்கள் நாம் தமிழர் கட்சியை புறக்கணிக்கலாம். ஆனால் மக்கள் எங்களை வரவேற்கிறார்கள். ஒரு எழுச்சியை எதிர்பார்க்கிறார்கள். அது எங்களுக்கு இந்த தொகுதியில் நிறையவே உள்ளது" என்று உறுதியாக சொல்கிறார் ராஜசேகர்.

பிணத்தின்மீதுதான்

இப்போது கூட இவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "தூத்துக்குடி Sterliteக்கு எதிராக மக்களோடு மக்களாக நின்று களமாடுவேன். என் பிணத்தின் மீது தான் அதை திறக்க முடியும்" தூத்துக்குடி நாம் தமிழர் வேட்பாளர் சா. கிறிஸ்டன்டைன் ராசசேகர்" என்று பதிவிட்டுள்ளார்.

ஆதரவு கமெண்ட்கள்

ஆதரவு கமெண்ட்கள்

ஆனால் இதற்கு கீழே பல கமெண்ட்கள் குவிந்து வருகிறது. "13 பேரை வாயில் சுட்டவனுக ..இவரை சுட்டு திறக்க மாட்டானுகளா..ஓட்டுகளை பிரிக்காம ஓரமா போனாலே போதும் ..திமுக ஸ்டெர்லைட்ட நிரந்தரமா மூடும்" என்று திமுகவுக்கு ஆதரவாக கமெண்ட் விழுகிறது.

ஆதரவு எதிர்ப்பு

ஆதரவு எதிர்ப்பு

அதேபோல, "தி.மு.க வா? இதையே அடுத்த தேர்தலிலும் சொல்லி வாக்கு கேட்ப்பார்கள். இதை சொல்லி இதுவரை 2 முறை எம்.பி ஆனதுதான் மிச்சம் .." என்று திமுகவுக்கு எதிரான கமெண்ட்களும் விழுகிறது. இப்படி ஆதரவு எதிர்ப்புகளுக்கு இடையே ராஜசேகர் என்ன செய்ய போகிறார்? எப்படி கனிமொழியையும் தாண்டி வெற்றி பெற் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Rajasekar is contesting for Thoothukudi Constitution on behalf of Naam Tamizhar Party. He assures that "I will not let the Sterlite plant reopen"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X