தலைமையேற்க வாங்கம்மா.. சசிகலாவிற்கு ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானம்.. ஷாக் தந்த அதிமுக நிர்வாகிகள்
தூத்துக்குடி: அஇஅதிமுகவுக்கு பொதுச் செயலாளராக சசிகலா தொடர வேண்டும் என விளாத்திகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சட்டசபை தேர்தலில் பங்கேற்க மாட்டேன் ஒன்று ஒதுங்கி இருந்த சசிகலா, தற்போது அதிமுகவை மீட்கப்போவதாக தொண்டர்களிடம் அடிக்கடி பேசி வருகிறார். லாக்டவுன் முடிந்த பின் தொண்டர்களை ஊர் ஊராக போய் சந்தித்து பேசப்போவதாகவும் கூறி வருகிறார்.
அதிமுக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் சசிகலா பக்கம் வராத நிலையில், அவர் தொண்டர்களை குறிவைத்து களம் இறங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் இபிஎஸ் தலைமை, சசிகலா உடன் பேசும் நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி வருகிறது. இதுவரை பலரையும் நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றம்
இது ஒருபுறம் எனில் சசிகலாவின் செயலை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் முதல்முறையாக அஇஅதிமுகவுக்கு பொதுச் செயலாளராக சசிகலா தொடர வேண்டும் என விளாத்திகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுச்செயலாளர்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் விளாத்திகுளத்தில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ரூபம் வேலவன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அஇஅதிமுகவுக்கு பொதுச் செயலாளராக சசிகலா தொடர வேண்டும என்று வலியுறுத்தினர்.

சர்வாதிக்காரத்தன்மை
பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக சில மாவட்டங்களில் கட்சி தொண்டர்கள் கிளைக் கழக நகர கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒப்புதல் பெறாமல் அவர்களது விருப்பத்திற்கு மாறாக நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சசிகலா கழகம் ஒற்றுமையுடனும் வலிமையுடன் செயல்படும் நோக்கத்தோடு தொலைபேசி வாயிலாக உரையாடிய கழக உறுப்பினர்களை சர்வாதிகாரத் தன்மை யோடு நீக்கியதை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தொண்டர்கள் சந்திப்பு
சசிகலா மாவட்டம் தோறும் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தி தொண்டர்களை சந்தித்து தொண்டர்களின் கட்சிதான் அஇ அதிமுக என வலுப்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்துகிறோம். கழகம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஓரணியில் திரளும் நோக்குடன் தொண்டர்களை நோக்கி சந்திப்பு பயணம் மேற்கொள்ளவிருக்கும் சசிகலாவின் வருகையை இக்கூட்டம் மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறது என்பது உள்ளிட் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் பங்கேற்பு
பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் ராமசாமி பாண்டியன் அம்மா பேரவை நகர செயலாளர் பொன்ராஜ் ஒன்றிய மாணவரணி செயலாளர் செண்பகராமன் மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜெயசீலன் நகர பொருளாளர் சுதாகர் ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications