அவ்வளவு காச கண்ல பாத்ததே கிடையாதே.. பிரியாணி மாஸ்டருக்கு 18 கோடி ஜிஎஸ்டி பாக்கி! அதிர வைத்த லெட்டர்
திருப்பத்தூர்: சமீபகாலமாக ஏழை எளிய மக்களின் பான் கார்டை பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தெரியாமல் ஏழை மக்களுக்கு ஜிஎஸ்டி வரிப்பாக்கி செலுத்த வேண்டுமென கடிதம் வருவதும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பெண் கூலி தொழிலாளி ஒருவருக்கு 13 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்த வேண்டிய அனுப்பப்பட்ட கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த பிரியாணி மாஸ்டர் 18 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என கடிதம் வந்திருப்பது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த பால்னங்குப்பம் துரைசாமி வட்டம் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் அமீர்பாஷா(33)என்பவர் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில்,மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அலுவலகத்தில் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் அமீர் பாஷா சென்னையில் அமீர் டிரேடிங் கோ என்கிற நிறுவனம் நடத்தி அதில் 18 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை உடனடியாக செலுத்த வேண்டும் என வந்த கடிதம் வந்துள்ளது.

இந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமீர் பாஷா இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது உங்களது பான் கார்டு வைத்து தான் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்திருக்கிறார்கள். உங்களது பான் கார்டுக்கு நீங்கள் தான் பொறுப்பு என சொன்னதாக சொல்லப்படுகிறது.
திருப்பத்தூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மட்டுமே தனக்கு வங்கி கணக்கு இருக்கும் நிலையில் தனது பான் கார்டை பயன்படுத்தி மோசடி நபர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறியுள்ள அமீர் பாஷா, இது தொடர்பாக திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் மாவட்ட ஆட்சியிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
தனது ஆவணங்களை வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உறி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஜெராக்ஸ் கடை உள்ளிட்டவற்றில் பான் கார்டுகளை கொடுக்கும்போது சிலர் மோசடியாக அவற்றை கூடுதலாக பிரதி எடுத்து இதுபோன்ற கும்பலுக்கு விற்பதாகவும், அவர்கள் இதுபோன்ற நபர்களின் பான் கார்டுகளை வைத்து போலியான நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி வரி விதிப்பு மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications