வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரபல நிறுவன "ஊறுகாய்" பாட்டிலில் மிதந்த பொருள்.. மாங்காய் ஊறுகாய் சாப்பிட்ட பெண் அட்மிட்.. வேலூரில்

பிரபல நிறுவனத்தின் ஊறுகாய் பாட்டிலில் கண்ணாடி துண்டு இருந்துள்ளது

Google Oneindia Tamil News

வேலூர்: ஒரு பிரபலமான ஊறுகாய் நிறுவனத்தின் அஜாக்கிதையால், பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாகவே, ஆர்டர் செய்யப்பட்ட உணவு பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார்கள் வெடித்து கிளம்பி உள்ளன.. 2 மாதங்களுக்கு முன்பு சென்னை திருவெற்றியூரை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் ஆன்லைன் மூலமாக, எஸ்எஸ் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி கடையில், சிக்கன் பிரியாணியும், சிக்கன் லாலிபாப்பும் ஆர்டர் செய்துள்ளார்.

அப்போது, பிரியாணியில் துர்நாற்றம் வீசியுள்ளது.. சிக்கன் லாலிபாப்பும் கெட்டுப்போயுள்ளது.. அதேபோல,அம்பத்தூரை சேர்ந்தவர் சேகர் என்பவர், ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி மூலம் KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார்...

இது வெறும் தொடக்கம்தான்.. இது வெறும் தொடக்கம்தான்..

சிக்கன்

சிக்கன்

அந்த சிக்கன் வேகாமல் இருந்துள்ளது.. இது தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கொண்டு செல்லப்பட்டாலும், உணவுப்பொருட்களின் தரம் என்பது குறைந்தே காணப்படுகிறது.. அந்தவகையில், சூப்பர் மார்க்கெட்டுகளின் உணவு பொருட்களையும் சேர்த்து கொள்ளலாம்.. சூப்பர் மார்க்கெட்களில் குளிர்பதன பெட்டிகளில் சேமிக்கப்படும் காய்கறிகள், இறைச்சி என உணவுப் பொருட்களைத் தான் பெரும்பாலும் மக்கள் வாங்கி சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.

விஷ ஜந்துக்கள்

விஷ ஜந்துக்கள்

ஆனால், இவ்வாறு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் சில நேரங்களில் பூச்சிகள், பல்லிகள் போன்ற விஷ ஜந்துக்கள் இருப்பதாக செய்திகளும் அவ்வப்போது வெளிவருகின்றன.. இவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பேக்கிங் செய்யும்போது சரியான முறையில் கவனிக்காமல் அஜாக்கிரதையாக செயல்படுவதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது... அதிலும் இதுபோன்ற புகார்கள் பிரபலமான கம்பெனிகள் மீது எழுந்துவருவதுதான் பொதுமக்களிடம் அதிர்ச்சியை உண்டுபண்ணி விடுகிறது.

கண்ணாடி துண்டு

கண்ணாடி துண்டு

இப்போதும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி... இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்று, ருசி கம்பெனியின் மாங்காய் ஊறுகாய் பாட்டிலை வாங்கி வந்துள்ளார்... அந்த ஊறுகாயை நேற்றுதான் பிரித்து சாப்பிட்டார்.. மதியம் அவர் சாப்பிடும்போது, அந்த மாங்காய் ஊறுகாயை எடுத்து கடித்துள்ளார். அப்போது திடீரென அவரது வாயில் கண்ணாடி துண்டு குத்திவிட்டது.. ஊறுகாயில் 2 கண்ணாடி துண்டுகள் இருந்திருக்கின்றன.. அதில் ஒரு துண்டு, அவரது தொண்டையில் சிக்கி ரத்தம் கொட்டி உள்ளது..

கண்ணாடி பீஸ்

கண்ணாடி பீஸ்

வலி பொறுக்க முடியாமல் லட்சுமி அலறி துடிக்கவும், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. வாயில் பலமான காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. உணவுப் பொருட்களில் ஆபத்தான பொருட்கள் இருக்கும் சம்பவங்கள் அடிக்கடி வெளியாகி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது என்றாலும், இவ்வளவு பெரிய கம்பெனி பிராண்டிலும்கூட அஜாக்கிரதையா? என்ற அதிர்ச்சியே அதிகரித்துள்ளது. ஊறுகாயில் இருந்த அந்த கண்ணாடி பீஸ்களின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

English summary
famous pickle company carelessness and pieces of glass in mango pickle
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X