வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

’இதுவும்’ சனாதனம் தான்! 40 வருஷத்தில் கடலுக்குள் மூழ்கி விடும்! பரபரப்பை பற்ற வைத்த ஆளுநர் ரவி!

Google Oneindia Tamil News

வேலூர் : நதிகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், நதிகளை நாம் தெய்வமாக வணங்க வேண்டும் அப்போதுதான் அவைகளை பாதுகாக்க முடியும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

Recommended Video

    40 வருஷத்தில் கடலுக்குள் மூழ்கி விடும்! பரபரப்பை பற்ற வைத்த ஆளுநர் ரவி!

    அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ ராயண பீடத்தில் பாலாறு பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவி பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

     அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா? அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா?

    ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்நியாசிகள் பங்கேற்றுள்ளனர். விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி," நதிகளை நாம் பாதுகாக்க
    அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி

    ஆளுநர் ஆர்.என்.ரவி

    2016 இல் பிரதமர் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பு திட்டத்தை துவக்கி வைத்தார்.
    ஆரம்பத்தில் பல நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 100 நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள் . வரும் 2025 க்குள் 100 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 2021 செப்டம்பர் மாதத்திலே அந்த இலக்கை அடைந்து விட்டோம்.

    நதிகளை வணங்க வேண்டும்

    நதிகளை வணங்க வேண்டும்

    இந்தியா 2030 க்குள் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள் இது தான் சனாதனம். பூமி ஒரு ஆதாரமாக பார்க்க கூடாது அதை வணங்க வேண்டும். கால நிலை மாற்றம் உலகத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது .

    சனாதன தர்மம்

    சனாதன தர்மம்

    அடுத்த 30 - 40 ஆண்டுகளுக்குள் சிறிய தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கார்பன் வெளியேற்றத்தால் பல பிரச்சனை ஏற்படுகிறது அதனை தடுக்க நாம் முன் வரவேண்டும். என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து நீரை வழிபட்டுள்ளேன். ஆதிகாலம் முதல் பஞ்ச பூதங்களை வணங்கி வருகிறோம். சிலப்பதிகாரத்தில் அரசன் கூட குளம்,குளங்களை வெட்டி பாதுகாக்க வேண்டும் என இளங்கோவடிகள் சொன்னது போல ஓவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் என்ற திட்டத்தை பிரதமர் செயல்படுத்தி வருகிறார்.

     நாம் ஒன்றிணைய வேண்டும்

    நாம் ஒன்றிணைய வேண்டும்

    இந்த திட்டத்தின் மூலம் 2023 ஆகஸ்ட்க்குள் 50 ஆயிரம் குளங்களை வெட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியமான ஆண்டுகள், 2047 ல் ஏரியில் நாம் உலக நாடுகளுக்கு தலைமை நாடாகத் திகழ வேண்டும். அதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என பேசினார்

    English summary
    Governor of Tamil Nadu RN Ravi has said that we must all work together to protect the rivers and only then can we worship the rivers as a deity to protect them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X