அடுத்தடுத்து தொடரும் நில அதிர்வுகள்.. வேலூர்தான் மையம்.. ஏன் இப்படி?
வேலூர்: வேலூரில் தொடர்ந்து 3ஆவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுவரை வேலூர் சுற்று வட்டாரத்தில் சமீபத்தில், எந்தெந்த தேதிகளில் இது போன்ற நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
Recommended Video
நவம்பர் 29, 2021- திருப்பத்தூரை மையமாக கொண்டு அதிகாலை 4.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டை, தும்பேரி கிராமத்தினர் இந்த அதிர்வை உணர்ந்தனர். எனினும் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என வருவாய் துறை தகவல்.
எனினும் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தட்டபாறை கிராமத்தில் செல்வம் என்பவரின் வீட்டில் விரிசல் எழுந்தது. இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

பெங்களூர் ்ருகே
டிசம்பர் 22: பெங்களூரில் அடுத்தடுத்து இரு முறை நில அதிர்வு. பெங்களூரின் அண்டை பகுதியான, சிக்கபல்லாபுரத்தில் 11 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது 3.3 ரிக்டர் அளவாக பதிவானது. காலை 7 மணி ஒன்றும் காலை 7.15 மணிக்கு இன்னொன்றும் ஏற்பட்டதாக தகவல்.

சித்தூர்
டிசம்பர் 23: சித்தூரில் மதியம் 3.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. பூமியிலிருந்து 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே டிடி மோட்டூர், தரைக்காடு ஆகிய பகுதிகளில் வீட்டிலிருந்த பொருட்கள் விழுந்தன. இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

பேர்ணாம்பட்டு
டிசம்பர் 25: வேலூர் பேர்ணாம்பட்டு அருகே 3ஆவது முறையாக இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பேரணாம்பட்டில் தொடர்ந்து 3ஆவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் இதற்கு காரணம் என்ன என்பது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். எனினும் இதுவரை வந்த நிலஅதிர்வுகளுக்கு காரணம் கண்டறியப்படவில்லை.

ஆய்வு பணி
பேரணாம்பட்டை அடுத்த தரைக்காடு பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் ஒரு தனியார் பல்கலைக்கழக புவியியல் ஆராய்ச்சி பேராசிரியர் உள்ளிட்டோர் தரைக்காடு பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்தபோதே நில அதிர்வை உணர்ந்துள்ளனர். இதனால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

முகாம்கள்
இதனிடையே நிருபர்களிடம் பேசிய ராமமூர்த்தி, நில அதிர்வை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம். நில அதிர்வால் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோரை முகாம்களுக்கு மாற்றி அரசு சார்பில் அவர்களுக்கு உதவிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications