உழைப்பு இருந்தால் யாரும் பதவிக்கு வரலாம்! பிரதமர் மோடியை புகழ்ந்த அமைச்சர் துரைமுருகன்!
வேலூர்: உழைப்பு இருந்தால் யாரும் எந்த பதவிக்கும் வரலாம் என்றும் டீ கடை நடத்திய மோடி உழைப்பால் பிரதமராக வந்திருக்கிறார் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.
வேலூர் மாவட்டம் சேண்பாக்கத்தில் மகளிர் நியாய விலை கடையை திறந்து வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
இதனிடையே உழைப்பால் யாரும் முன்னுக்கு வரலாம் என்பதற்கு பிரதமர் மோடியை துரைமுருகன் உதாரணமாக கூறி பேசியது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நியாயவிலை கடை
வேலூர் மாவட்டம் சேண்பாக்கத்தில் பெண்கள் நியாய விலைக் கடையை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன், உழைப்பை பற்றி அங்கிருந்தவர்கள் மத்தியில் பாடம் எடுத்தார். அப்போது உழைப்பால் மோடி பிரதமராக உயர்ந்திருக்கிறார் என்பதை குறிப்பிட்ட அவர் திமுகவில் உழைத்தால் யாரும் எந்தப் பதவிக்கும் வரலாம் எனத் தெரிவித்தார். கட்சிக்காக வருடக்கணக்கில் உழைக்கும் பலர் தேர்தலின் போது மட்டும் எதிர்க்கட்சிக்காரன் கூட கரம் கோர்த்துவிடுவதாக வேதனை தெரிவித்தார்.

உண்மையான உழைப்பு
யார் யார் எப்படி என்பதும், அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதும் தனக்கு நன்கு தெரியும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். ஒரு கட்சிக்கு உழைப்பைக் கொடுக்கும் போது அது உண்மையான உழைப்பாக இருக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அட்வைஸ் செய்தார்.

வண்டல் மண்
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக உட்கட்சிப் பூசல் நிலவி வரும் சூழலில், துரைமுருகன் பேச்சு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏரிகளில் வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் துரைமுருகன் தமிழக அரசின் சாதனைகளையும், செயல்திட்டங்களையும் பட்டியலிட்டு பெருமிதம் தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக
உழைப்புக்கு பிரதமர் மோடியை துரைமுருகன் உதாரணமாக கூறி பேசியது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனிடையே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பொறுத்தவரை பேசும் பொது அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை ஒளிவுமறைவின்றி பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’












Click it and Unblock the Notifications