தமிழக அரசு ‘இதற்கும்’ நிதி மூலதனத்தை உருவாக்க வேண்டும்... கார்த்தியின் உருக்கமான பேச்சு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரிதான மரபணு நோய்களுக்கான ஆதரவு சங்கத்தின் (எல்.எஸ்.டி.எஸ்.எஸ்.) சார்பில் இந்திய அரிதான மரபணு நோய்கள் தினம் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நடிகர் கார்த்தி மற்றும் பிரபல மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கார்த்தி, "மரபணு குறைபாடுகளால் பிறக்கும் குழந்தைக்கு ஆயுள் முழுவதும் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. எனவே, தமிழக அரசு மரபணு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நிதி மூலதனத்தை உருவாக்க வேண்டும்" என வலியுறுத்தினார். மேலும், 'முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்திப்பதாகத் தெரிவித்த கார்த்தி, அவ்வாறு வந்ததும் இந்த விசயம் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Karthi Sivakumar, cause ambassador of LSD Support Society, addressing a workshop on Tuesday appealed to the state government to provide free treatment to children with such disorders.
Please Wait while comments are loading...