தமிழகத்தை உலுக்கிய 6 பேர் கொலை வழக்கு... சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீர் மரணம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் தாசநாய்க்கன்பட்டி சவுடாம்பிகா நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் கடந்த 2010ம் ஆண்டு குடும்ப உறுப்பினர்கள் 5 பேருடன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த 6 பேர் கொலை வழக்கு. சிபிசிஐடி விசாரணையில் சொத்துப் பிரச்சினையில் இந்தக் கொலைகளை குப்புராஜின் மகன்களே செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட குப்புராஜின் மகன் சிவகுரு கடந்த ஆறு ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சிவகுரு, இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

வீடியோ:

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Salem prison, accused in 6 persons death case was died, because of health issues.
Please Wait while comments are loading...