ஜிப்மர் மருத்துவமனையில் ரூ. 6.75 கோடி செலவில் டயாலிசிஸ் யூனிட்... கிரண்பேடி திறந்து வைத்தார்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகள் நலனுக்காக பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருகட்டமாக, ரூ.6.75 கோடி செலவில் 25 நவீன டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட புறநோயாளிகளுக்கான சிறப்பு டயாலிசிஸ் சிகிச்சை பிரிவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதன்கிழமை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பது அரசின் கடமையாகும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் பண வசதி உடையவர்கள் இதுபோன்ற சிகிச்சைகளுக்கு பணம் செலுத்த வேண்டும். அப்போது தான் இதன் மூலம் ஏழைகளுக்கும் இலவச சிகிச்சை தரமுடியும். ஜிப்மர் மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள இந்த டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு தொலைநோக்கான சிறந்த முன்னோடியான திட்டமாகும்" என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Puducherry Lieutenant Governor Kiran Bedi has inagurated the JIPMER out-patient Haemodialysis Centre in Puducherry on Wednesday. P. Kannan, former Rajya Sabha member, is with them.
Please Wait while comments are loading...