அமைச்சரின் பக்கா ஸ்கெட்ச்! திமுகவில் இணைந்த பாஜக வேட்பாளர்! சூடுபிடித்த தேர்தல் களம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் திடீர் திருப்பமாக திமுகவில் இணைந்துள்ளார்.
பாஜக வேட்பாளர் திமுகவில் இணைந்துள்ள நிகழ்வு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
பாஜக வேட்பாளரை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு திமுகவுக்கு அழைத்த வந்த பின்னணியில் அமைச்சர் மஸ்தான் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு நாட்கள் நெருங்க நெருங்க அரசியல் களத்தில் பல டிவிஸ்ட்கள் அரங்கேறி கொண்டே வருகின்றன. சீட் கிடைக்காதது, தேர்தல் செலவுக்கு பணம் தராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகம் தழுவிய அளவில் கட்சி பேதமின்றி கட்சித் தாவல்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தையே தொடங்கிவிட்ட பாஜக வேட்பாளர் ஒருவர் தன்னை திமுகவில் ஐக்கியப்படுத்தியுள்ளார்.

2-வது வார்டு
செஞ்சி பேரூராட்சியின் 2-வது வார்டி பாஜக சார்பில் துரை என்பவர் போட்டியிட்டார். இப்போது அவர் திடீர் திருப்பமாக திமுகவில் இணைந்து பாஜக தலைமைக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். பாஜக வேட்பாளரை திமுகவில் இணைத்ததன் பின்னணியில் அமைச்சர் மஸ்தான் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே பல இடங்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தாதது கவனிக்கத்தக்கது.

செஞ்சி பேரூராட்சி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதன் வாக்காளர்கள் எண்ணிக்கை 23,950 ஆகும். அமைச்சர் மஸ்தானின் மகன் மற்றும் மனைவி இரண்டு வார்டுகளில் திமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதேபோல் 18 வார்டுகளிலும் திமுக, அதிமுக, பாஜக, பாமக, என மொத்தம் 100 பேர் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

திமுக -பாமக
செஞ்சி பேரூராட்சியை பொறுத்தவரை திமுக -பாமக இடையே கடும் போட்டி உருவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் செஞ்சி தொகுதியில் பாமக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணியின்றி பாமக தனித்து போட்டியிடுவதால் திமுக தரப்பு பேரூராட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.
-
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்?











Click it and Unblock the Notifications