விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"NO. 1".. கிளம்பியாச்சு சூறாவளி.. மொத்த கட்சியையும் முந்திக்கொண்டு.. வேட்பாளரை அறிவித்த கட்சி.. அடடே

வரப்போகும் இடைத்தேர்தலில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போட்டியிடுகிறது

Google Oneindia Tamil News

விருதுநகர்: வரப்போகும் இடைத்தேர்தலில், தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. அத்துடன் வேட்பாளரையும் அறிவித்து அதிரடியை கிளப்பிவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கீழராஜ குலராமன் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி.. தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவராக உள்ளார்.. மதுவுக்கு எதிரான பிரச்சாரங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருபவர்.

அதேபோல, தேர்தல் சமயங்களில் பெரிய பெரிய கட்சிகளுடன் மோதி களம் காண்பவர்.. கடந்தமுறை தேர்தலின்போதுகூட, சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார் செல்லபாண்டியன்..

கமல் கட்சியிடம் கூட்டணி பேரம்.. குடிக்காமலேயே மயங்கி விழுந்த செல்லபாண்டியன்!.. அப்படி என்ன சொன்னார்?கமல் கட்சியிடம் கூட்டணி பேரம்.. குடிக்காமலேயே மயங்கி விழுந்த செல்லபாண்டியன்!.. அப்படி என்ன சொன்னார்?

தாலிக்கயிறு

தாலிக்கயிறு

இதற்காக கையில் ஒரு தாலியுடனும் கழுத்தில் பல தாலிக் கயிறுகள் தொங்கியபடியும் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து, வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.. அதாவது, மது குடித்தால் உயிரிழப்பு ஏற்பட்டு தனது குடும்பத்தைப் பாதிக்கும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இவ்வாறு கையில் தாலியுடன் நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல, கடந்த எம்பி தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியில் சேரும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவித்திருந்தது, அப்போது மிகப்பெரிய டிரெண்டிங் ஆனது.. ஆனாலும், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், மது குடிப்போர் சங்கம் தொடர்ந்து, தங்களின் கருத்துகளை தெரிவித்துவருகிறது..

செல்லப்பாண்டியன்

செல்லப்பாண்டியன்

"கொள்கையில்லா கூட்டணியை எந்தக் கட்சிகள் வேண்டுமானாலும் உருவாக்கலாம்... ஆனால், குவார்ட்டர் இல்லாத கூட்டத்தை எந்தக் கொம்பனாலும் கூட்ட முடியாது. தமிழ்நாட்டில், இப்படை தோற்கின் எப்படை வெல்லும். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்" என்று மது குடிப்போர் சங்க மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் அப்போது அதிரடியாக கூறியிருந்தார்..சில நாட்களுக்குமுன்புகூட, அரசு டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகளை போதைப்பொருள் என்று நிரூபித்து கெஜட்டில் வெளியிட வைத்தால் ஒரு லட்சம் பரிசு தருவதாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவித்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது..

கெஜட்

கெஜட்

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் களமிறங்குவதாக அறிவித்துள்ளது... ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடத்தப்பட உள்ள நிலையில், அதற்காக ஜனவரி 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது... தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் இன்னும் தேர்தல் பணிகளை தொடங்காத நிலையில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அந்த தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்...

ஆறுமுகம்

ஆறுமுகம்

அவர் பெயர் எம்.எஸ்.ஆறுமுகம்.. இவர்தான், அங்கு போட்டியிட போகிறார்.. ஆனால், கையில் டெபாசிட் தொகை இல்லை என்பதால், டாஸ்மாக் கடைகளின் வெளியே கிடக்கும் காலி பாட்டில்களைப் பொறுக்கி விற்பனை செய்ய அவர் திட்டமிட்டு இருக்கிறார். அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு டெபாசிட் தொகையைக் கட்டப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.. "காலி பாட்டில்கள் தான் எங்களுக்கு நிதி, டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தான் எங்களுக்கு கதி" என்ற முழக்கத்தோடு காலிபாட்டில்களை பொறுக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்..!!

English summary
First Candidate announced by liquor awareness society contest in the by election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X