அமெரிக்க அதிபர் தேர்தல்.. 50 மாகாணங்களும் தேர்தல் முடிவு சான்றிதழ்களை வழங்கியாச்சு.. அடுத்து என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் ஒரு வழியாக நிறைவடைந்து, 50 மாகாணங்களில் தேர்தல் முடிவுகளுக்கான சான்றிதழ் வழங்கி முடித்து விட்டன.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து அங்கு வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், வெற்றி பெற்றதாக ஊடகங்கள் கணிப்பு வெளியிட்டன. ஆனால் இதை குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்டு டிரம்ப் இதை ஏற்க மறுத்து பல மாகாணங்களில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவை நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இருப்பினும், பெரும்பாலான மாநிலங்களில் அதிகாரப்பூர்வமாக ஜோ பிடன் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது. ஆனால் இப்போதுதான் மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் அதிகாரப்பூர்வமாக வெற்றிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடைசி மாகாணமாக சேர்ந்துள்ளது வெர்ஜீனியா. அங்குள்ள 5 தேர்தல் வாக்குகளை டொனால்ட் ட்ரம்ப் பெற்றுள்ளார்.
ஜோ பிடன் 306 தேர்தல் வாக்குகளையும், டொனால்டு டிரம்ப் 232 தேர்தல் வாக்குகளையும் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 538 தேர்தல் வாக்குகள் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றத்தில் 270க்கு மேல் யார் பெறுகிறார்களோ அவர்களே அதிபர்.
தேர்தல் நடைமுறையில் அடுத்து முக்கிய கட்டம் என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் டிசம்பர் 14ஆம் தேதி ஒன்று சேர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஓட்டுக்கள் அதிகாரிகளால் பதிவு செய்யப்படும். பின்னர், ஜனவரி 6ம் தேதி அமெரிக்க காங்கிரசின் கூட்டு கூட்டத்தின்போது வாக்குகள் எண்ணப்பட்டு அதன்பிறகு அதிபர் பதவி ஏற்பார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications