வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீழ்த்தப்பட்டார் டொனால்ட் டிரம்ப்... ஆனால் அவர் விதைத்து விட்டுப் போகும் "விதை"....!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் ஜோ பிடன் வெற்றி வாகை சூடியிருக்கிறார். ஒருவழியாக டொனால்ட் டிரம்ப் தோல்வியைத் தழுவி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் தருணம் வந்துவிட்டது. ஆனால் அமெரிக்க மண்ணில் டிரம்ப் விதைத்துவிட்டு செல்வது பேரினவாதம் அல்லது தேசியவாதம் எனும் டிரம்ப்பிசத்தை. அது வேர்பிடித்து நிற்கவே போகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடன் களம் கண்டார். நவம்பர் 3-ல் வாக்குப் பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

தொடக்கம் முதலே ஜோ பிடன் முன்னிலையில் இருந்தாலும் டிரம்ப் தமது வெற்றியின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அதற்கேற்ப அவரும் கணிசமான வாக்குகளைப் பெற்றவராகவும் இருந்தார். டொனால்ட் டிரம்ப் இறுதியில் தோல்வியைத் தழுவியவராக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக வெள்ளை இன அமெரிக்கர்களின் மனங்களை வென்றவராக இருக்கிறார்.

28 வருடங்களில் இதுதான் முதல் முறை.. மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர்! தகர்ந்த டிரம்ப் சாம்ராஜ்யம்28 வருடங்களில் இதுதான் முதல் முறை.. மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர்! தகர்ந்த டிரம்ப் சாம்ராஜ்யம்

அமெரிக்கர் நலன் குறிக்கோள்

அமெரிக்கர் நலன் குறிக்கோள்

டொனல்ட் டிரம்ப் தமது வெள்ளை இன அமெரிக்கர்களின் நலனுக்காக பிற இனங்கள், பிற நாடுகளின் குடிமகன்களின் நலன்கள், மனித உரிமைகள் என எதனையும் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாதவராக இருந்தார். எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க, அகதிகளின் குடும்பங்களை பிரிப்பது போன்றவை மனித உரிமை மீறலாக நமக்கு இருக்கிறது. அமெரிக்கர்களுக்கு அது கொண்டாட்டமானது.

தேசியவாதம்

தேசியவாதம்

இந்தியர்கள் உள்ளிட்டோரின் வேலைவாய்ப்புகளில் வேட்டு வைக்கும் விசா கெடுபிடிகள் நமக்கு ஆபத்தானவை; ஆனால் அமெரிக்காவின் மக்களுக்கு அது கொண்டாட்டத்துக்குரியதான செய்தி. டிரம்ப் சொல்வது போல அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பெருமளவு உயர்த்திக் காண்பித்தேன் எனது அமெரிக்கர்களுக்கான பெருமிதம். அமெரிக்கர்களை அமெரிக்காவின் குடிமக்களாக தேசியவாதத்தின் கீழ் ஒருங்கிணைத்துவிட்டுத்தான் போகிறார் டிரம்ப்.

டிரம்ப்பிசம் கோட்பாடு

டிரம்ப்பிசம் கோட்பாடு

அமெரிக்கர்களின் நலன்களின் மட்டுமே அரசுகள் அக்கறை செலுத்தியாக வேண்டும்; அதாவது டிரம்ப்பிசத்தை அல்லது பேரினவாத கோட்பாட்டை இனிவரும் அத்தனை அமெரிக்க அதிபர்களும் புறந்தள்ளிவிட்டுப் போக முடியாது என்கிற வகையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு வலதுசாரிதனத்தை வலிமையாக்கி வைத்துவிட்டுப் போகிறார் டொனால் டிரம்ப்.

டிரம்ப்பிசம் வலதுசாரி கோட்பாடு

டிரம்ப்பிசம் வலதுசாரி கோட்பாடு

இந்த வலதுசாரித்தனத்தை ஆதரிக்கிறார்கள் அமெரிக்கர்கள் என்பதற்கு அவர் வாங்கிய ஓட்டுகளே சாட்சி. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வீழ்த்தப்பட்டுவிட்டார் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு அவரது டிரம்ப்பிச வலதுசாரி கோட்பாடும் விதைக்கக்கப்பட்டிருக்கிறது என்பதும் நிதர்சனம்.

English summary
Donald Trump lost in US Presidential Poll. But He established a Right Wing Trumpism Ideology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X