திடீரென முடங்கிய "விமான சேவை.." தவிக்கும் பயணிகள்.. அமெரிக்காவில் பரபரப்பு!
வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் பரவலாக விமான சேவை முடங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விமான பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
உலக வல்லரசு நாடான அமெரிக்கா விமான பயன்பாடு அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
உள்நாடு, வெளிநாடு என தினமும் நுற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம்.

திடீரென விமான சேவை முடக்கம்
இந்த நிலையில் இன்று அமெரிக்கா முழுவதும் பரவலாக விமான சேவை முடங்கியுள்ளது. கம்ப்யூட்டர் சிஸ்டத்துடன் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவின் பல விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் விமான சேவை பாதிக்கப்பட்டு இருப்பதால் பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர். அமெரிக்காவில் அனைத்து விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக என்.பி.சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரைக்கு இல்லாத அளவுக்கு
பயணிகள் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் விமான சேவை முடங்கியதால் கடும் சிரமத்தை எதிர்கொண்டு இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விமான போக்குவரத்து நிபுணர் பர்வேஸ் தமானியா கூறுகையில், "அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தற்போது தான் இந்த அளவுக்கு விமான சேவை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருப்பதாகவும்" கூறியுள்ளார்.

விரைவில் சீர் செய்யப்படும்
தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அமெரிக்காவின் விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது. விரைவில் தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் விமான சேவை முடங்கியிருப்பதால் கடும் அவதி அடைந்து இருப்பதாகவும் விமானத்திலேயே காத்திருப்பதாக பயணிகள் பலரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

1,200 க்கும் மேற்பட்ட விமானங்கள்
அதுபோல பல விமான நிலையங்களில் டார்மாக் பகுதியில் பயணிகள் காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். பயணிகள் பலரும் தாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். பயணிகள் விமானம் மட்டும் இன்றி வணிக விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொழில்நுட்ப கோளாறு நீடிப்பதால் 1,200 க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை முடங்கியுள்ளது. அமெரிக்க நேரப்படி காலை 9 மணி வரை அனைத்து உள்நாட்டு விமான போக்குவரத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும் என அமெரிக்க விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு விவரங்களை அளிக்கும்
அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியிருக்கும் நிலையில் இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அமெரிக்க விமான போக்குவரத்து செயலர் கூறியிருப்பதாவது: - அமெரிக்க விமான போக்குவரத்து துறையை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு வருகிறேன். விமானிகளுக்கு பாதுகாப்பு விவரங்களை அளிக்கும் முக்கிய அமைப்பு (சிஸ்டம்) முடங்கியுள்ளது. இந்தக் கோளாறை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

காரணம் என்ன?
விமானம் செல்லும் பாதையில் ஆபத்து விளைவிக்கும் சாத்தியக் கூறுகள் இருந்தால் அது குறித்து விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறே நாடு முழுவதும் விமான சேவை முடங்கியதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications