ஜிபிஎஸ்சை மட்டும் நம்பினால் இது தான் கதி போல! 'உடைந்து போன பாலத்திற்கு வழி'.. உயிர் போன பரிதாபம்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் வட கரோலைனா மாகாணத்தில் உடைந்து போன ஒரு பாலத்தின் வழியை ஜிபிஎஸ் காட்டியதால் அதை நம்பி அப்பாலத்தில் சென்ற நபர் காரோடு ஆற்றுக்குள் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழி தெரியாத புதிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முன்பெல்லாம் மிகுந்த கஷ்டபட வேண்டும். உள்ளூர் நபர்களிடம் போகும் இடத்தை சொல்லி எந்த வழியாக செல்ல வேண்டும் என்று வழியை கேட்டு செல்ல வேண்டும்.
ஆனால், இப்போதைய ஸ்மார்ட் உலகத்தில் அந்த கவலை எல்லாம் இல்லை. செல்போனில் உள்ள ஜிபிஎஸ் வசதியை பயன்படுத்தி எங்கு வேண்டும் என்றாலும் சென்று விடுகின்றனர்.

கூகுள் மேப்
இந்தியா போன்ற நாடுகளில் கூகுள் மேப்ஸ் - ஐ பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இதன் பயன்பாடு பெருகிவிட்டது. எவ்வளவு தூரம் ஆனாலும் எந்த இடமானாலும் சரி நொடிப்பொழுதில் செல்ல வேண்டிய இடம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது.. அதை சென்றடைய தோராயமாக எவ்வளவு நேரம் ஆகும் என்று ஓரளவு சரியாக சொல்லி விடுகிறது. இதனால், தற்போதெல்லாம் வழி தேடி பெரிதும் அலைய வேண்டியது இல்லை.

கண்மூடித்தனமாக நம்பி போக கூடாது
ஆனாலும் இதில் சில சமயங்களில் சிக்கல்களும் இருக்கின்றன. ஏனெனில், யாருமே பயன்படுத்த முடியாத சாலைகளையும் செல்ல முடியாத அளவிலான குறுகலான பாதைகளையும் காட்டி விடுவதாக நெட்டிசன்கள் அவ்வப்போது குறை கூறுவதை காண முடியும். மீம்ஸ்களும் இது தொடர்பாக நகைச்சுவை உணர்வோடு வெளியாகி வருவதைக் கூட பலரும் பார்த்திருப்போம். வெறுமனே ஜிபிஎஸ்-சை கண்மூடித்தனமாக நம்பிப்போகவும் கூடாது என்பதை மெய்பிக்கும் வகையில்தான் தற்போது அமெரிக்காவின் வட கரோலைனா மாகாணத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாலம் ஒன்றின் வழியாக செல்ல..
அமெரிக்காவின் வட கரோலைனா மாகானத்தை சேர்ந்தவர் பில் பாக்ஸன் (வயது 47). இவர் தனது 9 வயது மகளின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பி கொண்டிருக்கிறார். அப்போது வழி தெரியாததால், ஜிபிஎஸ்-சை ஆன் செய்து விட்டு அது செல்லும் வழியில் காரை ஓட்டிச்சென்றார். ஹிகோரி நகரம் அருகே வந்த போது பாலம் ஒன்றின் வழியாக செல்ல வேண்டும் என்று ஜிபிஎஸ் வழிகாட்டி கூறியிருக்கிறது.

காரோடு ஆற்றில் விழுந்தார்
பாக்சனும் இதை நம்பி எந்த தயக்கமும் இன்றி காரை பாலத்தில் விட்டிருக்கிறார். பெரிதாக வாகனம் எதுவும் வராததால் வேகமாக சென்றதாக தெரிகிறது. ஆனால், இறுதியில் அந்த பாலமே அவருக்கு எமனாக இருந்து இருக்கிறது. ஏனெனில் அது உடைந்த பாலமாகும். 9 ஆண்டுகளுக்கு முன்பே சேதம் அடைந்து கைவிடப்பட்ட அந்த பாலத்தில் சென்றதால் ஆற்றில் காரோடு விழுந்த பாக்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாமியார் குற்றச்சாட்டு
இந்த தகவலை பாக்சனின் மாமியார் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் பாலத்தில் சேதம் அடைந்துவிட்டதாக தகவல் எதுவும் இல்லை என்றும் அங்குள்ள அரசு நிர்வாகம் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறார். எது எப்படியோ கண்மூடித்தனமாக தொழில்நுட்பத்தை நம்புவது ஆபத்தானது என்பதற்கு இதுவே ஒரு சான்று என நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications