நடுவானில் டர்புலன்சில் சிக்கி குலுங்கிய விமானம்..பீதியில் உறைந்த பயணிகள்..36 பேர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து ஹவாய்க்கு 278 பயணிகளுடன் பறந்த விமானம் நடுவானில் டர்புலன்சில் சிக்கியதால் அந்த விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதில் அந்த விமானத்தில் இருந்த 36 பயணிகள் காயமடைந்தனர்.
விமானங்கள் வானில் செல்லும் போது சில நேரங்களில் டர்புலன்ஸில் சிக்குவது உண்டு.
இது வழக்கமானது என்றாலும் சில நேரங்களில் கடுமையாக விமானம் குலுங்கி பயணிகளுக்கு காயத்தை ஏற்படுத்தி விடும்.

36 பயணிகள் காயம்
அதுவும் அந்த குறிப்பிட்ட நிமிடங்கள் பயணிகள் பீதியில் உறைந்து விடுவர். இதனிடையே, ஹவாய் நாட்டுக்கு சொந்தமான விமானம் இந்த டர்புலன்சில் சிக்கி குலுங்கியுள்ளது. இதில் 36 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரத்தில் இருந்து ஹவாய் நாட்டில் உள்ள ஹோனோலுலு நகரத்திற்கு ஹவாயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

டர்புலன்சில் சிக்கிய விமானம்
இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென டர்புலன்சில் சிக்கியது. இதனால், விமானம் கடுமையாக குலுங்கியது. அடுத்தத்தடுத்து விமானம் குலுங்கியதால் பயணிகள் கடும் அச்சம் அடைந்தனர். விமானம் தரையிறங்குவதற்கு 30 நிமிடங்களே இருந்த நிலையில், டர்புலன்சில் சிக்கியதால் பயணிகளுக்கு இந்த பயணம் பெறும் ரணமாக மாறிவிட்டது. 278 பயணிகள் மற்றும் 10 விமான சிப்பந்திகள் விமானத்தில் பயணம் செய்தனர். டர்புலன்சில் சிக்கிய விமானம் பத்திரமாக ஹோனோலுலு விமான நிலையத்தில் தரையிறங்கியது.

14 மாத கைக்குழந்தை உள்பட..
எனினும் விமானத்தில் பயணம் செய்த 36 பயணிகள் காயம் அடைந்தனர். இவர்களில் 20 பேர் அவசர சிகிச்சை அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் 14 மாத கைக்குழந்தையும் அடங்கும். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் லேசான காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஹவாயின் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

விமான நிறுவனம் பதில்
சில பயணிகளுக்கு கடுமையான காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. காயம் அடைந்த விமான பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை அளித்து வருவதாகவும் நிலமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

டர்புலன்ஸ் என்றால் என்ன?
விமான பயணங்களின் டர்புலன்ஸ் ஏற்படுவது அடிக்கடி ஏற்படும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. காற்றுக்கொந்தளிப்பு என்று இதை சொல்கிறார்கள். காற்றின் திசையில் ஏற்படும் மாறுபாடு, வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த கொந்தளிப்பு ஏற்படுகிறது. பொதுவாக பெரிய அளவில் இந்த டர்புலன்ஸ் ஏறப்டுத்துவது இல்லை. விமான விபத்துக்களும் நடைபெற்றதாக தகவல் எதுவும் இல்லை. எனினும், விமானங்கள் குலுங்குவதால் பயணிகளுக்கு காயங்கள் ஏற்படுகின்றது. விமான பயணிகளுக்கும் பெரும் அச்சத்தையும் திகிலூட்டுவதாகவும் இந்த காற்றுக்கொந்தளிப்பு ஏற்படுத்தி விடுகிறது. அரிதாக சில சமயங்களில் பயணிகளுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தி விடுவதாகவும் சொல்லப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications