வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மிதக்கும் சொர்க்கம்!" அடேங்கப்பா எத்தனை வசதி! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்! அதென்ன பறக்கும் விடுதி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வாடிக்கையாளர்களைக் கவர நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அதுபோன்ற ஒரு முயற்சியின் வீடியோ நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது.

இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் லாபகரமான தொழிலைச் செய்வது சவால் மிகுந்ததாக மாறி உள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இதில் பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், வித்தியாசமான தனித்துவமான முயற்சிகளை ஆதரிக்கப் பொதுமக்கள் என்றுமே தவறியது இல்லை. அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் இப்போது நடந்துள்ளது.

உணவு

உணவு

எப்போதும் விமான பயணங்களின் போது பரிமாறப்படும் உணவுகளில் சுவை இருக்காது. பயண காலத்தில் வேறு வழியின்றி தான் விமானங்களில் கொடுக்கும் உணவைச் சாப்பிட வேண்டி இருக்கும். உணவு பிரியர்களுக்கு என்று இல்லை, சாதாரண பயணிகளால் கூட கஷ்டப்பட்டுச் சாப்பிட வேண்டியதாகவே அது இருக்கும். இதற்கான தீர்வை தான் அதன் நிறுவனம் முன் வைத்துள்ளது.

 பறக்கும் சொகுசு விடுதி

பறக்கும் சொகுசு விடுதி

அதேபோல மேகங்களுக்கு நடுவே பறந்து கொண்டே சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் கூட இருக்கும். இது எப்போதும் நிறைவேறாத ஆசை என்று நினைத்துவிட வேண்டாம். பலரது தீராத இந்த ஆசையைத் தீர்க்கவே இத்திட்டம் மொழியப்பட்டு உள்ளது. வானத்தில் எப்போதும் பறந்து கொண்டே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலை ஹஷேம் அல்-கைலி என்பவர் வடிவமைத்துள்ளார்.

 வசதிகள்

வசதிகள்

ஒரே நேரத்தில் இந்த ஹோட்டலில் 5000 பேர் வரை தங்க முடியும். இதனை விமானம் என்றும் சொல்லலாம், பறக்கும் ஹோட்டல் என்றும் சொல்லலாம். வானத்தின் அழகை 360 டிகிரி கோணத்தில் ரசிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. மால், விளையாட்டு அரங்கு, நட்சத்திர ஹோட்டல்கள், பார்கள், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் என அனைத்து சொகுசு வசதிகளையும் உள்ளடக்கி இந்த பறக்கும் ஹோட்டல் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தரையிறங்காது

தரையிறங்காது

மேலும், இந்த விமானம் ஒரு முறை பறக்கத் தொடங்கிவிட்டால் மீண்டும் தரையிறங்கவே இறங்காதாம். எரிபொருள் நிரப்ப எல்லாம் என்ன செய்வது என கேட்கிறார்களா? அந்த சிக்கல் எல்லாம் இதற்கு இல்லை. காரணம் இது அணுசக்தியில் இயங்க உள்ளது. இந்த ஜம்போ விமானம் மொத்தம் அணுசக்தியில் இயங்கும் 20 என்ஜின்களைக் கொண்டதாக இருக்கும். எதாவது ரிப்பேர் ஏற்பட்டாலும் கூட அதையும் வானத்திலேயே வைத்துச் சரி செய்யும் வசதி இதில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

 விமானிகள் தேவையில்லை

விமானிகள் தேவையில்லை

இப்படி அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாகும் இந்த ஹோட்டலை இயக்க எத்தனை பேர் வேண்டும் என நினைக்கிறீர்கள். 10 அல்லது 20? ஆனால் உண்மையில் இதை இயக்க யாரும் தேவையில்லை. AI- பைலட் அடிப்படையில் முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இந்த விமானம் இயங்குகிறது. இந்த பறக்கும் சொகுசு ஹோட்டல் எப்போது பறக்கத் தொடங்கும் என்ற தேதி அறிவிக்கப்படவில்லை.

 மிதக்கும் சொர்க்கம்

மிதக்கும் சொர்க்கம்

இருப்பினும், இந்த மிதக்கும் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையிலான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. வீடியோவில் இருக்கும் வசதிகளைக் கண்டே நெட்டிசன்கள் மிரண்டு போய்விட்டனர். இதன் காரணமாகவே அதை மிதக்கும் சொர்க்கம் எனக் குறிப்பிடத் தொடங்கிவிட்டனர். இது பறக்கத் தொடங்கும் போது பல வாரங்களுக்கு இது நிச்சயம் ஹவுஸ்புல்லாக தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

English summary
Sky Cruise that will function on nucelar power will never lands: (வானத்தில் மிதக்கும் பறக்கும் சொகுசு வீடியோ) Sky Cruise can handle 5000 people that is driven by AI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X