என்ன சொல்றீங்க.. கிட்ட சென்றால் அவ்வளவுதான? ஆபத்தான செங்கடல்.. அடியில் அப்படி என்னதான் இருக்கு?
வாஷிங்டன்: செங்கடலின் அடிப்பகுதியில் 10 அடி நீளமுள்ள 'டெத் பூல்' எனப்படும் மரணக்குளம் இருப்பதாகவும், இங்கு மனிதர்கள் உள்பட உயிரினங்கள் சென்றால் உயிரிழந்து விடுவார்கள் என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூமியில் 75 சதவீதத்திற்கும் மேலாக நிரம்பியிருப்பது கடல். பல்வேறு அதிசயங்களையும் விலங்கிகனங்களையும் கொண்ட கடலில் பல மர்மங்களும் உள்ளன.
இத்தகைய மர்மங்களை அவிழ்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இன்றும் அவர்களால் முழுமையாக இதில் வெற்றி பெற முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பல மர்மங்களை கொண்டதாகவே கடல் அறியப்படுகிறது.

உயிருக்கே ஆபத்தாக முடியும்
அந்த வகையில், ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள செங்கடலின் அடிப்பகுதியில் மரணத்தை விளைவிக்கும் ஒரு மரண குளம் ஒன்று இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 10 அடி ஆழம் கொண்ட குளம் கடல் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பேராபத்தாக உள்ளது. ஆம் இந்த மரணக்குளம் அருகே மனிதர்கள் சென்றாலோ அல்லது மீன் உள்ளிட்ட உயிரினங்கள் சென்றாலும் அதன் உயிருக்கே ஆபத்தாக முடியுமாம்.

உயிரினங்கள் வாழ முடியாது
மிகவும் அரிதானதாக காணப்படும் இந்த மரணக்குளம் அதீத உப்புத்தன்மையை கொண்டது. இதேபோல் ஆக்சிஜனும் துளி அளவு கூட இங்கு இல்லை. இதன் காரணமாக இந்த மரண குளத்தில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது. ''டெத் பூல்'' என்று அழைக்கப்படும் இந்த மரண குளத்தை அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த உப்பு நீர் குளத்தில் எந்த ஆக்சிஜனும் இல்லாததால், இதனுள் செல்லும் எந்த ஒரு உயிரினமும் ஒரு நொடி திகைத்து விடும் அல்லது உயிரிழந்து விடும் என்று பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.

எப்படி உருவானது?
1,770 மீட்டர் ஆழம் கொண்ட இந்த மரண குளம் எப்படி உள்ளது என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக ரிமோட் மூலமாக நீருக்கடியில் இயக்கும் இயந்திரத்தை கடலுக்கடியில் அனுப்பி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப் பிறகு கூறிய விஞ்ஞானிகள், "இத்தகைய கடல் ஆழத்தின் அடிப்படுகையில் பொதுவாக அதிக உயிரினங்கள் வசிப்பது இல்லை. கடல் வாழ் உயிரினங்களுக்கு இது கெட்ட செய்தியாக இருந்தாலும், பல்லுயிர்களுக்கு இது வளம் நிறைந்தவையாக உள்ளது. இதில் கிடைக்கும் தரவுகள் வரும் காலத்தில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக கடல் எவ்வாறு உருவாகின என்பதை கண்டறிய உதவும்.

உறுதி செய்வது கடினம்
இதேபோல் மிகக் கடினமான சூழலிலும் வளம் மிக்க இந்த நுண்ணுயிரிகள் வாழ்வது கண்டறியப்பட்டதன் மூலம் பூமியில் வாழ்வின் வரம்புகளைக் கண்டறிய இது பெரிதும் உதவும், மேலும் நமது சூரிய மண்டலத்திலும் அதற்கு அப்பாற்பட்ட நம்மால் காண முடியாத, பார்த்திடாத உள்ள வேறு இடங்களில் உயிர்கள் வாழ முடியுமா? என்ற தேடலுக்கும் இது உதவும்.
பூமியில் வாழ்வின் வரம்புகளை நாம் கண்டறியும் வரை (அதாவது பூமியிலேயே நம்மால் வாழமுடியாத இடங்கள் இருக்கும் போது) வேற்று கிரகங்களில் நாம் வாழ்வதற்கு தகுந்த சூழல் இருக்குமா? என்பதை உறுதி செய்வது கடினம்" என்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications