'வருங்காலத்தில் பசுபிக் பெருங்கடலே இருக்காது'.. புதிய கண்டமாக உருவாகும்.. ஆராய்ச்சியாளர்கள் பகீர்
வாஷிங்டன்: பூமியின் டெக்டானிக் பிளேட்டுகளை ஆய்வு செய்ததில் அடுத்த 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் பசுபிக் பெருங்கடல் மறைந்து போய் புதிய அமாசியா கண்டம் உருவாகும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.
பூமி எப்படி தோன்றியது என்பது தொடங்கி, பூமியில் ஏற்பட்டு வரும் தொடர் மாற்றங்கள், பேரண்டத்தில் நடைபெற்று வரும் மாற்றங்கள் ஆகியவற்றையும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விஞ்ஞானிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆய்வுகளில் பூமியை நாம் பாதுகாக்கா விட்டால் என்ன நடக்கும்... வருங்கால தலைமுறைகள் என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. என்பன போன்ற பல திடுக்கிடும் முடிவுகள் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன.

திடுக்கிடும் தகவல்
அந்த வகையில் அடுத்த 200 முதல் 300 மில்லியன் ஆண்டுகளில் ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடல் மறைந்துவிடும் என்றும் ஆசிய கண்டம் அமெரிக்க கண்டங்களுடன் மோதி 'அமாசியா' என்ற புதிய சூப்பர் கண்டம் உருவாகும் என்றும் ஆய்வாளர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கர்டின்(Curtin) பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் பேகிங் (Peking ) பக்லைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.

புதிய கண்டம் உருவாகும்
மேலும் அவர்கள் கூறுகையில், ''பசுபிக் பெருங்கடல் மெதுவாக அதேவேளையில் தொடர்ச்சியாக மூழ்கி கொண்டுதான் இருக்கிறது. அதாவது ஆண்டுக்கு ஒரு இன்ச் அளவுக்கு சுருங்கி வருகிறது. இதனால், ஒரு கட்டத்தில் தோராயமாக சுமார் 20 கோடி ஆண்டுகள் முதல் 30 கோடி ஆண்டுகளுக்குள் பூமியின் நிலப்பரப்பில் பெரும் மாற்றம் ஏற்படும். அதாவது ஆசிய அமெரிக்க கண்டங்கள் ஒருங்கிணைந்து புதிய சூப்பர் கண்டம் (அமசியா) உருவாகும்.

சூப்பர் கண்டத்தின் சுழற்சி
கடந்த 20 கோடி ஆண்டுகளில் பூமியில் உள்ள கண்டங்கள் ஒன்றுக்கொன்று மோதி 60 கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்குகின்றன. இது சூப்பர் கண்டத்தின் சுழற்சி முறை என்று அறியப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் இன்னும் பல கோடி ஆண்டுகளில் தற்போது இருக்கும் கண்டங்கள் மீண்டும் ஒன்றுக்கொன்று மோதும் என்பதேயாகும் என்று தேசிய அறிவியல் ஆய்வு இதழில் (journal National Science Review) முன்னணி ஆசிரியரான சுவான் ஹூவாங் என்பவர் தெரிவித்துள்ளார்.

பசுபிக் பெருங்கடல் மறைந்து போகும்
இது குறித்து ஆய்வாளர்கள் மேலும் விவரிக்கையில், ''உள்புற அழுத்தம் மற்றும் வெளிப்புற அழுத்தம் என இரு வழிகளில் சூப்பர் கண்டங்கள் உருவாகும் என்று நம்பப்படுகிறது. சூப்பர் கணிணியை பயன்படுத்தி பூமியின் டெக்டானிக் பிளேட்டுகளை தூண்டுவதாக ஆய்வு செய்ததில் அடுத்த 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் பசுபிக் பெருங்கடல் மறைந்து போய் புதிய அமாசியா கண்டம் உருவாகும்.

அண்டார்டிகா கண்டம்
பூமியில் நடைபெறும் இந்த முக்கிய மாற்றங்களில் ஆஸ்திரேலிய கண்டமும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 30 கோடி ஆண்டுகளில் உருவாகும் இந்த புதிய சூப்பர் கண்டம் பூமியின் உச்சியில் உருவாகி பின், பூமத்திய ரேகையை நோக்கி தெற்காக சரியும். இது நடக்கும் பட்சத்தில் அண்டார்டிகா கண்டம் தொடர்ந்து பூமியின் அடிப்பகுதியில் தனித்த கண்டமாகவே இருக்கும்.

பூமியே மாறுபடும்
ஆஸ்திரேலிய கண்டம் ஏற்கன்வே ஆண்டுக்கு 7 செ.மீட்டர் அளவுக்கு ஆசியா நோக்கி நகர்ந்து வருகிறது. அதேவேளையில் யூரோசியாவும் அமெரிக்காவும் பசுபிக் பெருங்கடலை நோக்கி மெதுவான வேகத்தில் நகர்ந்து வருகின்றன. புதிய கண்டம் உருவாகும் பட்சத்தில் நமது பூமி இப்போது இருப்பதை விட பெருமளவு மாறுபட்டு இருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications