"நம்பர் 38.." கொசுவில் இருந்த சீக்ரெட் கோட்! அடேங்கப்பா இது வேற லெவலில் இருக்கே! நெட்டின்சன்கள் ஷாக்
வாஷிங்டன்: உங்களை திடீர் திடீரென எங்கிருந்தோ வரும் கொசுக்கள் கடிக்கிறதா? அதுக்கு என்ன காரணம் என்று புதிய விளக்கத்தை நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
உலகில் உள்ள அனைத்து கண்டங்களில் இருக்கும் உயிரினங்களில் ஒன்று கொசுக்கள் தான். காடுகள் முதல் பாலைவனங்கள் வரை பல வகையான கொசுக்கள் இங்கு உள்ளன.
உலகில் மனிதர்களை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் கொசுக்கள் குறித்து இணையத்தில் இப்போது மிகவும் வினோதமான ஒரு தகவல் பரவுகிறது. அதைப் படித்தால் நமக்கு நிச்சயம் அச்சம் வரும்

கொசுக்கள்
மழைக் காலங்களில் நாம் அனைவருமே இந்த கொசுக்களால் படாதபாடு பட்டு இருப்போம். இவை நமது தூக்கத்தை மட்டும் கெடுப்பதில்லை மாறாக, டெங்கு போன்ற மிகக் கொடூரமான நோய்களையும் கூட பரப்புகிறது. ஒவ்வொரு ஆண்டும் கொசுக் கடியால் பல கோடி தொற்றுகள் ஏற்படுகிறது. இப்படி மனிதக் குலத்திற்குப் பல தீமைகளைத் தரும் கொசுக்களைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர்.

உளவு
அதேநேரம் மறுபுறம் அதை உளவு பார்க்கும் ஒரு கருவியாகவும் மாற்றச் சிலர் முயன்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உளவு பார்க்க ஒற்றர்களை நம்பி இருந்த காலம் மாறி இப்போது அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் உளவு பார்த்து வருகிறார்கள். தொலைவில் இருந்து நாம் பேசுவதைக் கேட்கும் கருவி, மிகச் சிறிய கேமராக்கள் என உளவுத் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.

கான்ஸ்பிரஸி
கான்ஸ்பிரஸி கருத்தியலாளர்கள் இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரைக் கொசுக்களை வைத்து அரசுகள் தங்கள் நாட்டு மக்களைக் கண்காணிக்கிறதாம். இதனால் தான் கொசுக்களின் எண்ணிக்கையும் சமீப காலத்தில் அதிகரித்து இருக்கிறது என்கிறார்கள்,. இது தொடர்பாக லியாம் டிக்சன் என்பவர் கூறியுள்ள கருத்துகள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

நம்பர் 38
வீடியோ ஒன்றில் அவர், "38 என்ற எண் கொசு ஒன்றில் இருந்தது. அதை நான் பார்த்தேன். அதேபோல எனது இன்னொரு நண்பர் வேறு எண்ணைக் கொண்ட கொசுவைப் பார்த்து உள்ளார். இது தொடர்பாக நாங்கள் சிலரிடம் கேட்டோம். ஆய்வுக்காகக் கொசுக்களை அவர்கள் இனப்பெருக்கம் செய்து இருக்கலாம். இதன் காரணமாகவே அவர்கள் கொசுக்களில் நம்பர்களைப் போட்டு உள்ளனர் என்கிறார்கள்" என்று அந்த வீடியோவில் கூறி இருந்தார்.

உளவு பார்க்கவே
இது உடனடியாக இணையத்தில் டிரெண்டானது. இதற்குப் பலரும் பல விதமான கருத்துகளைக் கூறி வருகின்றனர். குறிப்பாக ஒருவர், "இது ஆய்வுக்காக இல்லை. உளவு பார்க்க. சிறிய ரோபோ போன்ற கொசுக்களை இவர்கள் உருவாக்குகிறார்கள். அதை யாரை உளவு பார்க்க வேண்டுமே அங்கு அனுப்பி தேவையான தகவல்களைச் சேகரிக்கிறார்கள். இதை வல்லரசு நாடுகள் ரகசியமாகச் செய்து வருகிறது" என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும், நெட்டிசன்கள் பலரும் இதை நம்பவில்லை. நக்கலாகவே இதற்குப் பதில் கூறி வருகின்றனர்.

வாய்ப்பே இல்லை
அமெரிக்காவின் எஃப்.பி.ஐ உள்ளிட்ட உளவு அமைப்புகள் சிறிய பறவை போன்ற உளவு கருவிகளை உருவாக்கி உள்ளன. ஆனால், அப்படியொரு கருவியை உருவாக்குவது கடினம். கொசு போலச் சிறிய கருவிகளை உருவாக்கும் அளவுக்கு நமது தொழில்நுட்பம் இன்னும் வளரவில்லை. பேட்டரி வைக்கவே அதில் இடம் இருக்காது. கொசுக்களைப் போன்ற உளவு கருவிகள் சாத்தியம் தான் என்றாலும் அது இப்போது இல்லை என்றே நெட்டிசன்கள் பலரும் கூறுகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications