வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ட்விட்டர் சிஇஓ பதவியை ராஜினாமா செய்தார் ஜாக் டோர்சி.. புதிய சிஇஓ ஆக பராக் அக்ரவால் நியமனம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Recommended Video

    Twitter CEO பதவியை Jack Dorsey ராஜினாமா செய்தது ஏன்? | Oneindia Tamil

    சமூக வலைத்தளங்களில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனங்கள் எனப் பட்டியலிட்டால் அதில் பேஸ்புக்கும் ட்விட்டரும் நிச்சயம் இடம் பெறும். அதிலும் குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தின் பங்கு முக்கியமானது.

    வெறும் 140 எழுந்துகளை கருத்துகளைப் பதிவிட வேண்டும் என்ற ட்விட்டரின் கான்செப்ட் உலகளவில் ஹிட் அடித்தது.

    மிக துணிச்சலான முடிவு.. டிவிட்டரில் இனி அரசியல் விளம்பரம் வராது.. ஜாக் முடிவு.. ஏன் தெரியுமா? மிக துணிச்சலான முடிவு.. டிவிட்டரில் இனி அரசியல் விளம்பரம் வராது.. ஜாக் முடிவு.. ஏன் தெரியுமா?

    ட்விட்டர் நிறுவனம்

    ட்விட்டர் நிறுவனம்

    உலகின் முக்கிய டெக் நிறுவனங்கள் ஒன்றாக விளங்கும் ட்விட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர் ஜாக் டோர்சி. ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆகவும் இவர் இருந்து வந்தார். இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாக ஜாக் டோர்சி அறிவித்துள்ளார். கடந்த சில கலமாகவே ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து ஜாக் டோர்சி ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையான நிலையில், தற்போது அவர் பதவி விலகியுள்ளார்.

    ஜாக் டோர்சி ராஜினாமா

    ஜாக் டோர்சி ராஜினாமா

    இது தொடர்பாக ஜாக் டோர்சி தனது ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த 16 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் இணை நிறுவனர் முதல் தலைமை நிர்வாக அதிகாரி வரை.. நிர்வாகத் தலைவர், இடைக்கால சிஇஓ எனப் பல பொறுப்புகளில் பணியாற்றிய பிறகு, இது நான் வெளியேறுவதற்கான நேரம் என முடிவு செய்துள்ளேன். ட்விட்டர் அதன் நிறுவனர்களிடம் இருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல தயாராக உள்ளது என்று நான் நம்புவதாலேயே எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    அடுத்து என்ன

    அடுத்து என்ன

    ஜாக் டோர்சி பதவி விலகுவது உடனடியாக அமலுக்கு வருகிறது, அதேநேரம் ட்விட்டர் போர்ட் உறுப்பினர் குழுவில் டோர்சி தனது பதவிக்காலம் முடியும் வரை, அதாவது 2022 இறுதி வரை இருப்பார் எனக் கூறப்படுகிறது. 45 வயதான டோர்சி, பேமெண்ட் நிறுவனமான Square Inc. இன் தலைவராகவும் உள்ளார். மேலும் அவர் சமீபகாலமாக கிரிப்டோகரன்ஸிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    ட்விட்டர் நிறுவனத்தை வழிநடத்துவதை விட்டுவிட்டு மற்ற செயல்களில் டோர்சி அதிக நேரம் செலவிடுவதால் அவரை மாற்ற வேண்டும் என முதலீட்டாளர்கள் பல காலமாகவே அழுத்தம் கொடுத்து வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் முதலே ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்யலாம் எனத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் ஜாக் டோர்சி தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேநேரம் டோர்சி ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலகுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, அவர் 2008 இல் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார், பின்னர் 2015இல் மீண்டும் நிறுவனத்திற்குத் திரும்பினார்.

    புதிய சிஇஓ யார்

    புதிய சிஇஓ யார்

    ஜாக் டோர்சி பதிலாக ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உள்ள பராக் அக்ரவால் ட்விட்டரின் புதிய சிஇஓ ஆகப் பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியரான பராக் அக்ரவால் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார். அதேபோல விரைவில் ட்விட்டர் போர்ட் உறுப்பினராகவும் பராக் அக்ரவால் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.

    நம்பிக்கை உள்ளது

    நம்பிக்கை உள்ளது

    ட்விட்டர் புதிய சிஇஓ ஆக நியமிக்கப்பட்டுள்ள பராக் அக்ரவால் குறித்து ஜாக் டோர்சி தனது கடிதத்தில், "ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பராக் மீது எனக்கு ஆழமான நம்பிக்கை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அவரது பணி மிகச் சிறப்பாக இருந்துள்ளது. இந்த நிறுவனத்தை இப்போது அவர் வழிநடத்தும் நேரம் வந்துவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.

    ட்விட்டர் நிறுவனம்

    ட்விட்டர் நிறுவனம்

    ட்விட்டர் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது ஆண்டு வருவாயை 2023இல் இரட்டிப்பாக்குவதாகவும் பயனாளிகளை அடுத்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 20% வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. அதேநேரம் ட்விட்ப் நிறுவனம் டிக்டோக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற தளங்களிடம் இருந்து கடந்த சில ஆண்டுகளாகவே கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

    English summary
    Twitter CEO Jack Dorsey has announced that he is stepping down. Twitter's Chief Technology Officer (CTO) of Twitter, Parag Agrawal, will take over the role as CEO.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X