Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த 'நோஸ் ரிங்'..கண்டுபிடிக்கப்பட்ட இடம் தான் அல்டிமேட்..மருத்துவர்கள் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 5 ஆண்டுகளுக்கு முன் தொலைக்கப்பட்ட 'நோஸ் ரிங்' ஒன்று அவரது நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

நாம் எப்போதோ தொலைத்த சில பொருட்கள் திடீரென நாம் எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்து நம்மை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தும்..

மோதிரம் உள்பட சில அணிகலன்கள் முதல் நாம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய கேட்ஜெட்டுகள் உள்பட பலவற்றையும் தொலைத்து அதை கண்டுபிடித்த அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டு இருக்கலாம்.

 நுரையீரலில்'நோஸ் ரிங்'

நுரையீரலில்'நோஸ் ரிங்'

இப்படி நாம் எதிர்பாராத நேரத்தில் இப்படி முக்கியமான பொருட்கள் கிடைத்தால் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. இதேபோன்ற ஒரு நிகழ்வுதான் அமெரிக்காவில் நடந்து இருக்கிறது. ஆனால், தொலைத்த பொருள் கிடைத்ததால், அவர் மகிழ்ச்சி அடையவில்லை....மாறாக அதிர்ச்சியே அடைந்து இருக்கிறார். ஏன் தெரியுமா... 5 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கத்தில் தொலைத்த 'நோஸ் ரிங்' நுரையீரலில் சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

சுமார் 5 ஆண்டுகளுக்கு

சுமார் 5 ஆண்டுகளுக்கு

இதனால், அன்றைய தூக்கத்தை இழந்து தவித்து இருக்கிறார் ஜோ லிகின்ஸ் என்ற 35-வயதான நபர். இது குறித்து அவர் கூறியதாவது;- சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் தூங்கி எழுந்த போது நோஸ் ரிங் காணாமல் போயிருப்பதை உணர்ந்தேன். உடனே பெட் முழுவதும் தேடி பார்த்தேன். ஆனாலும் கிடைக்கவில்லை. அதை விழுங்கி கூட இருந்திருப்பேன் என்று நினைத்துக்கொண்டு மேற்கொண்டு தேடுவதை விட்டுவிட்டேன். அதன்பிறகு சில ஆண்டுகள் கழிந்த நிலையில் திடீரெனெ இரவு எனக்கு கடுமையான இருமல் ஏற்பட்டது.

கேலி செய்கிறார் என நினைத்தேன்

கேலி செய்கிறார் என நினைத்தேன்

தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தேன். எனது முதுகுப்பகுதியில் கடுமையான வலியை உணரத்தொடங்கினேன். நமது மூச்சுக்குழாயில் ஏதோ அடைப்பு ஏற்பட்டது போல உணர்ந்தேன். உடல் நிலை சரியில்லை என்று கருதியதால் மருத்துவரிடம் சென்றேன். அங்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில் 0.6 இன்ச் அளவு கொண்ட நோஸ் ரிங் நுரையீரலின் இடது மேல் பகுதியில் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். முதலில் மருத்துவர் இதை கூறும் போது கேலி செய்கிறார் என்றே நான் கருதினேன்'' என்றார்.

நோஸ் ரிங் பக்கமே போகமாட்டேன்

நோஸ் ரிங் பக்கமே போகமாட்டேன்

அதிர்ஷ்டவசமாக நுரையீரலில் வேறு ஏதேனும் பெரிய ஆபத்து ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தன்னை சந்திக்க வரும் நண்பர்களிடம் இந்த சம்பவத்தை கூறினால் யாரும் நம்ப மறுக்கின்றனராம். இதற்காகவே மருத்துவர்கள் அளித்த எக்ஸ்-ரேவை ஆதாரமாக வைத்துக்கொண்டு இருப்பதாக லிகின்ஸ் கூறி வருகிறார். அதேபோல், நுரையீரலில் இருந்து நோஸ் ரிங் அறுவை சிகிச்சை எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தன்னுடனே வைத்துக்கொண்டு அலையும் லிகின்ஸ், இனிமேல் நோஸ் ரிங் பக்கமே போகமாட்டேன் என்று சபதம் போடாத குறையாக சொல்லி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+