பேறுகால விடுப்பில் இருந்தவங்களையும் விடல மெட்டா நிறுவனம்..பறந்த பணிநீக்க மெயில்.. பதறிய பெண் ஊழியர்!
வாஷிங்டன்: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் லே ஆஃப் எனப்படும் பணி நீக்கம் நடைமுறையை தொடங்கிவிட்டது. மொத்தம் 11 ஆயிரம் ஊழியர்களை மெட்டா நிறுவனம் நீக்கியுள்ளது. பேறுகால விடுப்பில் இருந்த அன்னேகா படேல் என்ற ஊழியரையும் மெட்டா நீக்கி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் 50 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்கினார்.
இந்த செய்தியின் பரபரப்பு அடங்குவதற்குள் சமூக வலைத்தளத்தின் மற்றொரு ஜாம்பவான் நிறுவனமான பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா (Meta) வும் அதிரடியாக பணி நீக்கத்தை கையில் எடுத்தது.

மிகப்பெரும் பணி நீக்கம் இதுதான்
மெட்டா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 11 ஆயிரம் பேரை லே ஆஃப் செய்தது. இது மெட்டா நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 13 சதவிதம் ஆகும். மெட்டா நிறுவனத்தில் ஒட்டு மொத்தமாக சுமார் 87 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் 18 ஆண்டு கால வரலாற்றில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரும் பணி நீக்கம் இதுதான்.

பேறு கால விடுப்பிற்கு சென்ற..
செலவினங்களை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக மார்க் சூகர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் தெரிவித்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் எடுக்கப்படும் இத்தகைய லே ஆஃப் நடவடிக்கை அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மெயில் அனுப்ப தொடங்கிவிட்டதாம். இந்த லே ஆஃப் நடவடிக்கையில் இருந்து பேறு கால விடுப்பிற்கு சென்ற அன்னேகா படேல் என்ற ஊழியரும் தப்பவில்லை.

தூக்கி வாரிப்போட்டுள்ளது
3 மாத பெண் குழந்தையுடன் இருக்கும் மெட்டா நிறுவனத்தின் கம்யூனிகேஷன் மேனஜர் அன்னேகா படேலுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டதாக மெயில் வந்ததும் ஒரு நிமிடம் தூக்கி வாரிப்போட்டுள்ளது. இது குறித்து வேதனையுடன் தனது லிங்ட் இன் பக்கத்தில் அன்னேகா படேல் பதிவிட்டு இருப்பதாவது:- இன்று காலை எனது 3-மாத குழந்தை அழுததால் விழித்தேன். குழந்தையின் பசியை ஆற்றிவிட்டு அலுவலக மெயிலை திறந்து பார்த்தேன்.

11 ஆயிரம் ஊழியர்களில் நானும் ஒருவள்
அதில் ஒரு மெசேஜும் வரவில்லை. மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை நீக்குவது பற்றி அறிந்து இருந்ததால் மெயில் செக் செய்து பார்த்தேன். எமிலா மீண்டும் 4 மணிக்கு விழித்தாள். அப்போது எனது மேனேஜர் தனக்கு வேலை பறிபோனதாக மெசேஜ் செய்து இருந்தார். உடனே எமிலாவை தூங்க வைத்து விட்டு நானும் மெயிலை திறந்து பார்த்த போது மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்த 11 ஆயிரம் ஊழியர்களில் நானும் ஒருவள் என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

மிகுந்த சவால் மிக்கது
தற்போது பேறு கால விடுப்பில் இருக்கும் எனக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அடுத்தது என்ன? என்ற கேள்விக்கு பதிலளிப்பதே கடினம்தான். எனது பேறு கால விடுப்பு வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. தாயாக எனது முதல் சில மாதங்கள் எனது வாழ்வில் மிகுந்த சவால் மிக்கது. எனவே இதை நான் உலகத்திற்காக வர்த்தகம் செய்ய மாட்டேன். அடுத்த சில மாதங்களுக்கு என் மகள் எமிலாவிற்காக நான் செலவிட இருக்கிறேன்.

கடினமான கால கட்டம்
அதன்பிறகு அடுத்த ஆண்டு முதல் நான் பணி செய்ய தயராகி விடுவேன். அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் லே ஆஃப் செய்து கொண்டிருக்கின்றன. இது ஒரு கடினமான கால கட்டம் என்பதை அறிந்தே வைத்துள்ளேன். ஆனாலும் எனது மகளுடனான இந்த தருணத்தை ஒருபோதும் நான் திரும்ப பெற முடியாது.

திறமையான ஊழியர்களை இழந்துள்ளது
எனவே வரும் புத்தாண்டு முதல் கம்யூனிஷேகன்ஸ் ரோல் தொடர்பான வேலை வாய்ப்புகள் இருந்தால் என்னை ரெஃபர் செய்யுங்கள். மெட்டா நிறுவனம் திறமையான பல ஊழியர்களை இன்று இழந்துள்ளது" என்று பதிவிட்டு இருக்கிறார். பேறுகால விடுப்பில் உள்ள ஊழியருக்கு கூட கருணை காட்டாமல் லே ஆஃப் செய்த மெட்டா நிறுவனத்தின் செயல் பற்றி நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications