சர்வதேச அளவில் வன்முறைகளால் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான்.. ஜோ பைடன் கவலை
வாஷிங்டன்: சர்வதேச அளவில் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் மாளிகையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஜோ பைடன் பேசியதாவது: உலகம் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறது. ஆனால் அனைத்து இஸ்லாமியர்களும் இந்த ரம்ஜானை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலகின் பல நாடுகளில் வறுமை, ஏழ்மை, வன்முறை, நோய் பரவல் என்கிற நிலைமை நீடிக்கிறது. உலக நாடுகளில் அமைதி ஏற்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. இதற்கான அறிகுறிகள் உள்ளன. உலகம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்போதைய தருணத்தில் பல நாடுகளில் ரம்ஜான் பண்டிகையை அமைதியாக கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு விதமான சவால்களும், சோதனைகளும் தொடருவதை நாம் ஏற்றாக வேண்டும். இஸ்லாமியர்களால்தான் ஒவ்வொரு நாளும் அமெரிக்கா வலிமை பெற்று வருகிறது. அவர்களது உழைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. உலகளவில் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான். சர்வதேச அமைப்புகளுக்கு நான் இஸ்லாமியரைத்தான் தூதராக அமைத்துள்ளேன். ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாத உய்குர்ஸ், ரோஹிங்கியா இன மக்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications