வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செவ்வாய் கிரகத்தில் திடீர் திடீரென தோன்றும் மர்ம அமைப்புகள்! குழம்பிய ஆய்வாளர்கள்.. என்ன காரணம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தின் மேற்புறத்தில் இருக்கும் மர்ம அமைப்புகள் குறித்த ஃபோட்டோகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் முக்கிய கிரகங்களில் செவ்வாய் கிரகமும் ஒன்று. பூமிக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்தில் தான் மனிதர்கள் உயிர் வாழக் கூடிய சாத்தியம் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மகாராஷ்டிரா:உத்தவ் தாக்கரே அரசு நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அதிரடி உத்தரவு மகாராஷ்டிரா:உத்தவ் தாக்கரே அரசு நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அதிரடி உத்தரவு

இதன் காரணமாகச் செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் செவ்வாய் கிரகம் குறித்துக் கண்டறியும் விஷயங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

 செவ்வாய்

செவ்வாய்

செவ்வாய் கிரகம் என்பது ஆய்வாளர்களுக்கு எப்போதுமே ஆர்வத்தைத் தூண்டும் கிரகமாகவே இருந்து வந்துள்ளது. இதனிடையே செவ்வாய் கிரகத்தின் கண்காணிப்பு ஆர்பிட்டரில் உள்ள ஹை-ரெசல்யூஷன் இமேஜிங் எக்ஸ்பெரிமென்ட் (HiRISE) கேமராவால் எடுக்கப்பட்ட ஒரு புதிய படம், கிரகத்தில் ஒரு மர்மமான நிகழ்வைக் காட்டுவதாக அமைந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் இப்போது வசந்த காலம் நிலவும் நிலையில் மேற்பரப்பில் மர்ம வடிவங்கள் தோன்றி உள்ளன.

 பருவங்கள்

பருவங்கள்

செவ்வாய் கிரகத்தில் மொத்தம் நான்கு பருவங்கள் உள்ளன. அங்கு ஒவ்வொரு பருவமும் பூமியை விட இரு மடங்கு நீளமானது. பூமியில் வசந்த காலம் 90 நாட்கள் மட்டுமே இருக்கும் என்ற நிலையில், செவ்வாய் கிரகத்தில் இது 190 நாட்களுக்கு மேல் நீடிக்கும். வசந்த காலத்தில் இப்போது செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படத்தில் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் வெள்ளை ஜிக்-ஜாக் அமைப்புகள் காணப்படுகிறது. இடையே கருப்பு மற்றும் நீல நிற ஸ்ப்ரே போன்ற அமைப்புகளும் தெரிகிறது.

 ஆய்வாளர்கள்

ஆய்வாளர்கள்

செவ்வாய் கிரகத்தின் மண்ணில் உறைந்து அதைப் பிளவுபடுத்தும் நீர் பனியின் விளைவாகவே இந்த பாலிகன் போன்ற அமைப்புகள் ஏற்பட்டு உள்ளதாக அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாலிகன் விளிம்புகள் வசந்த காலத்தில் விரிசல் ஏற்படுவதால் மேற்பரப்பு பனியானது sublimation எனப்படும் ஒரு செயல்முறையால் வாயுவாக மாறுகிறது. இதன் காரணமாகவே செவ்வாய் கிரகத்தில் இதுபோன்ற அமைப்புகள் ஏற்படுகிறது.

 பாலிகன் அமைப்புகள்

பாலிகன் அமைப்புகள்

வசந்த காலத்தில் sublimation காரணமாக பாலிகன் அமைப்புகளின் எல்லைகளில் அரிப்பு ஏற்பட்டுப் பல திருப்பங்கள் ஏற்படுகின்றன. இந்த ஜிக்-ஜாக்குகள் தான் வறண்ட செவ்வாய் மேற்பரப்புக்கு எதிராக நிலத்தடியில் நீர்த்தேக்கங்கள் இருக்கிறது என்பதை உறுதி செய்யும் அறிகுறியாக இருக்கிறது. இந்த உலர் பனிக்கட்டி வாயு வெளியேற அனுமதிக்கும் துவாரங்களை உருவாக்குகிறது. மேலும் இந்த வாயு மேற்பரப்பிலிருந்து நுண்ணிய துகள்களை எடுத்துச் சென்று பாலிகன் அமைப்புகளை மேலும் அரிக்கிறது.

 துகள்கள்

துகள்கள்

இந்த துகள்கள் சில சமயங்களில் மேற்பரப்பில் விழுகின்றன. கறுப்பான இந்த துகள்கள் உலர்ந்த பனியில் இருக்கும் போது, அவை பிரகாசமான அடையாளங்களை ஏற்படுத்துகிறது. இது பார்க்க மிகவும் அற்புதமான செயல்முறையாக உள்ளது. இது தவிரச் செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டியாகத் தண்ணீர் இருக்கிறது என்பதை உறுதி செய்யவும் இது உதவுகிறது.

 கேமரா

கேமரா

கடந்த 2005ஆம் ஆண்டு செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு செய்ய ஏவப்பட்ட முக்கிய ஆர்பிட்டர்களில் HiRISE ஒன்றாகும். ஒரு பிக்சலுக்கு 30 சென்டிமீட்டர் வரை இமேஜிங் செய்யக் கூடிய ஆற்றல் கொண்ட இந்த கேமராவின் செவ்வாய் கிரகம் குறித்துப் பல உயர் துல்லிய படங்களை எடுத்து அனுப்பி உள்ளது. வரும் காலத்தில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்குச் சென்று ஆய்வு செய்யும்போது, அவர்கள் எங்கு தரையிறங்கினால் பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் இது கண்டறிந்து வருகிறது.

English summary
Mars images shows a mysterious phenomenon on the planet: (செவ்வாய் கிரகத்தில் தோன்றிய மர்ம பாலிகன் அமைப்புகள்) Mysterious phenomenon on surface on Mars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X