வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை தடுக்க காசநோய், போலியோ நோய்க்கான தடுப்பூசியை கொடுக்கலாமா?.. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்புக்கு காசநோய் தடுப்பூசி அல்லது போலியோ தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வைரஸை தடுக்க உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள். எனினும் கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுப்பதற்கு இன்று வரை மருந்து சந்தைக்கு வரவில்லை.

தடுப்பூசி சோதனை முயற்சிகள் வெற்றி கண்டு தயாரிக்கும் நிலை உருவாகவில்லை. 700 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான மருந்து தயாரிப்பது மிகவும் கடினமாகும். எனவே அடுத்த ஆண்டுதான் அனைவருக்கும் தடுப்பூசி என்பது சாத்தியமாகும்.

போர்கால எமர்ஜென்சி.. பெய்ஜிங் மார்க்கெட்டை மீண்டும் தாக்கிய கொரோனா.. சீனாவில் எதிர்பாராத டிவிஸ்ட்! போர்கால எமர்ஜென்சி.. பெய்ஜிங் மார்க்கெட்டை மீண்டும் தாக்கிய கொரோனா.. சீனாவில் எதிர்பாராத டிவிஸ்ட்!

கொரோனா

கொரோனா

இத்தனை நீண்ட காலம் காத்திருக்கும் நிலையில் நாம் இப்போது இல்லை. அதிலும் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்து வரும் அமெரிக்கா தயாராக இல்லை. அரிசோனா, கரோலினா, ப்ளோரிடா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் கொரோனா காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

மும்முரம்

மும்முரம்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக உள்ளது. எனவே இங்கு கொரோனாவை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என அந்நாட்டு விஞ்ஞானிகள் மருந்து கண்டுப்பிடிப்பில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

மருத்துவக் குழுவினர்

மருத்துவக் குழுவினர்

இதுகுறித்து டெக்சாஸ் மாகாணத்தின் நோய் எதிர்ப்புத் துறை பேராசிரியர் ஜெப்ரி டி சிரில்லோ கூறுகையில் இப்போதைக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதே தடுப்பூசி ஆகும். கொரோனா நோய்க்கு போலியோ தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து மருத்துவ குழுவினர் ஆராய்ந்து வருகிறார்கள்.

யோசனை

யோசனை

அது போல் காசநோய்க்காகன தடுப்பூசியான பேசிலஸ் கால்மெட் குய்ரின் என்ற மருந்து அமெரிக்காவில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே கொரோனா வைரஸுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாமா என்ற யோசனையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Recommended Video

    கொரோனா இல்லாத நாடானது நியுசிலாந்து... எப்படி சாத்தியப்படுத்தியது ?
    ஆராய்ச்சியாளர்கள்

    ஆராய்ச்சியாளர்கள்

    பிசிஜி தடுப்பூசியால் பிற நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் திறன் கொண்டுள்ளது. இந்த தடுப்பூசியை ஒரு சில புற்றுநோய்களுக்கு மருந்தாக கொடுக்கிறார்கள். எனவே அதை பயன்படுத்தி சோதனை நடத்தவும் ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Scientists are thinking of Tuberclosis and Polio vaccine for Corona virus as it inentsifies in America.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X