வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னப்பா இது டிரம்புக்கு வந்த சோதனை.. அதிபர் பதவி பறிபோனதும் டிரம்பை அன்ஃபாலோ செய்த டுவிட்டர் சிஇஓ

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கை அன்-ஃபாலோ செய்துள்ளார்.

துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் மற்றும் இவாங்கா டிரம்ப் ஆகியோரை அன்பாலோ செய்ததோடு ஜோ பிடனையும் அவர் பின் தொடரவில்லை.

Twitter CEO Jack Dorsey Unfollows Donald Trump Post US Elections

ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளவர் டொனால்ட் டிரம்ப்பு அதிபர் தேர்தலில் தோற்ற பிறகு, 368,743 பின்தொடர்பவர்களை இழந்துள்ளார், அதே நேரத்தில் பிடன் நவம்பர் 17 முதல் சுமார் 2.5 மில்லியன் ஃபாலோவர்களை புதிதாக பெற்றுள்ளார். எனவே ஜோ பிடனின் ஃபாலோவர் எண்ணிக்கை 21.6 மில்லியன் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

ட்ரம்ப் தனது அதிபர் பதவி, ட்விட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். விரைவான செய்தி அறிக்கைகளை வெளியிட்டார். எதிராளிகளை கண்டபடி வசைபாடினார்.

கொரோனா முடிவுகள் இருந்தால் மட்டுமே அனுமதி.... விமான நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் அதிரடி உத்தரவுகொரோனா முடிவுகள் இருந்தால் மட்டுமே அனுமதி.... விமான நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் அதிரடி உத்தரவு

ஜோ பிடன் அதிபராக பதவியேற்றதும், உலகத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சில கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு இழக்க நேரிடும் என்று ட்விட்டர் கூறியுள்ளது. சாதாரண பயனர்களின் அதே விதிகளுக்கு அவரும் உட்படுத்தப்படுவார்.

இந்த ஆண்டு அக்டோபரில், டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கை விக்டர் ஜீவர்ஸ் என்ற டச்சு ஆராய்ச்சியாளர் ஹேக் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை வெள்ளை மாளிகை மறுத்தது.

English summary
Twitter's CEO Jack Dorsey has unfollowed President of the United States Donald Trump's personal account just a few weeks ahead of the inauguration of President-elect Joe Biden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X