அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்
வாஷிங்டன்: ஈரானை காலி செய்து விடுவோம் என்று டிரம்ப் கெத்தாக பேசி வருகிறார். ஆனால், மறுபுறம் அமெரிக்காவின் அடி மடியில் ஈரான் கை வைத்திருக்கிறது. ஈரானின் நடவடிக்கையால், மொத்த அமெரிக்காவும் டிரம்புக்கு எதிராக திரும்பியிருக்கிறது.
அடித்த அடியில் ஈரான் எந்திரிக்காது என்று டிரம்ப் கூறி வரும் நிலையில், விஷயத்தை ஈரான் சீரியஸாக மாற்றியிருக்கிறது. அதாவது ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவையும் விலை உயர்வு பாதித்திருக்கிறது.

அமெரிக்காவில் என்ன பிரச்சனை?
இன்றைய தேதியில் அமெரிக்காவில், ஒரு காலன் பெட்ரோலின் விலை 3.31-3.35 டாலர் வரை உயர்ந்திருக்கிறது. ஒரு காலன் எனில் 3.8 லிட்டர் ஆகும். இதன் விலை ரூ.275-280 வரை அதிகரித்திருக்கிறது. அப்படியெனில் ஒரே வாரத்தில் ரூ.10-15 அதிகரித்திருக்கிறது. இது அமெரிக்க மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
PBS News/NPR/Marist கருத்துக்கணிப்பின்படி, மார்ச் மாதத்தில் டிரம்பின் மீதான மக்களின் அதிருப்தி 58% ஆக அதிகரித்திருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. டிரம்பின் செயல்பாடுகளை 35-36% வரை நிராகரித்திருக்கின்றனர்.
டிரம்ப் மீது அதிருப்தி
டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்திலும் இப்படி அதிருப்தியை சம்பாதித்திருந்தார். அமெரிக்க அதிபர் வரலாற்றிலேயே, ஒரு அதிபர் தனது முதல் பதவிக்காலம் மற்றும் இரண்டாவது பதவிக்காலத்தில் 50%க்கும் கீழ் ஆதரவை பெற்ற ஒரே அதிபர் டிரம்ப்தான். ஈரான் மீதான டிரம்பின் போர் நடவடிக்கையை வெறும் 39% மக்கள் மட்டுமே ஆதரிக்கின்றனர். இப்படியே போனால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முழுமையான போரில் இறங்கும் என்று 70% அமெரிக்க மக்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
அலட்டிக்கொள்ளாத டிரம்ப்
ஆனால், இதைப்பற்றியெல்லாம் டிரம்ப் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. என்னப்பா நீ பாட்டுக்கு போர் அது, இதுன்னு போற.. இங்க பெட்ரோல் விலை ஏறிடுச்சே! என கேள்விகள் எழுந்தபோது, "எனக்கு இதைப்பற்றியெல்லாம் எந்த கவலையும் கிடையாது. போர் முடிஞ்சதும் விலை சர்ருன்னு இறங்கிடும். அதனால எனக்கு இதைவிட பெரிய வேலை இருக்கு" என பதில் சொல்லியிருக்கிறார். இது மக்களை மேலும் சூடாக்கியிருக்கிறது. ஒரு அதிபர் இப்படியா பதில் சொல்லனும்? என கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
டிரம்பின் வாக்குறுதி
இவ்வளவு பேசும் டிரம்ப், அதிபர் தேர்தலின் போது, நான் ஆட்சிக்கு வந்தால் 12 மாதத்தில் பெட்ரோல்,டீசல் விலையை 50% வரை அப்படி குறைப்பேன் என்று கூறியிருந்தார். அப்படி பேசின டிரம்ப், இப்போது மாற்றி பேசுவதால்தான் மக்கள் டென்ஷன் ஆகியுள்ளனர். ஏற்கெனவே வரி விஷயத்தில் டிரம்ப் ஆடிய ஆட்டம் காரணமாக, அமெரிக்காவில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. இப்படி இருக்கையில், அதை தொடர்ந்து தற்போது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்!












Click it and Unblock the Notifications